Sunday, July 30, 2023

#225 - 663-664-665 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

663. ஸ்ரீ கேஶிக்4னே நம:

ஶிரகண்ட2 சே2தி3ஸுவ வஜ்ரஸ்த2கேஶிஹாநமஸ்தே

ஸுரத்3விட் கேஶி நாம அஸுரன்ன ஸீளி பி3ஸுடி

க்ரூர கேஶி ஹாஹாகாரதி3 கோபதி3ம் 3ரலு

வஜ்ரகர கண்ட2தொ3ளு நுக்3கி3ஸி ஸீள்தி3 ஸ்ரீகிருஷ்ண 

(எதிரிகளின்) தலை, கழுத்து ஆகியவற்றை அழிக்கும் கேஶிக்னே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸஜ்ஜனர்களின் நண்பனே. கேஶி நாமக அசுரனை நீ அழித்தாய். க்ரூரனான கேஶி, ஹாஹாகாரம் செய்தவாறு, கோபத்துடன் வர, உன்னுடைய வஜ்ர கரமானது, அவனது கழுத்தில் அழுத்தி அவனை கொன்றாய், ஹே கிருஷ்ணனே. 

664. ஸ்ரீ ஹரயே நம:

ஶத்ரு பரிஹார மாடு3ஹரிநமோ நினகெ3

ஶத்ரு ஈர்வித4வு பா3ஹ்யாந்தரக3 நீ களெவி

ஶத்ருக3 பாபக3 கஷ்டக3ள் பரிஹரிஸி

ஸர்வப்ரகாரத3லு ஸுக2வித்து ரக்ஷிஸுவியோ 

எதிரிகளை அழிக்கும் ஸ்ரீஹரியே உனக்கு என் நமஸ்காரங்கள். அகத்தில் & புறத்தில் இருக்கும் இரு விதமான எதிரிகளை நீ அழிப்பாய். எதிரிகளின், பாவிகளின் (அவர்கள் நமக்குக் கொடுக்கும்) கஷ்டங்களை பரிகரித்து, ஸஜ்ஜனர்களுக்கு அனைத்து விதங்களிலும் சுகம் அளித்து காப்பாயாக. 

665. ஸ்ரீ காமதே3வாய நம:

காமித க்3ருஹாதி33 ப்ராப்தி மாடு3வவனு

காமதே3வனேநமோ நினகெ3 காமத3 உதா3

காம ஆனந்த3 ஞான ஸ்ருஷ்ட்யாதி3 கர்த்ரு ஸுக2கா

காம ஸ்மராந்தர்யாமி காமதே3 ஸனத்குமார 

விரும்பிய இஷ்டார்த்தங்களை அளிக்கும் காமதேவனே உனக்கு என் நமஸ்காரங்கள். விரும்பியவற்றை அளிப்பவனே. கருணைசாலியே. காம, ஆனந்த, ஞானத்தை கொண்டவனே. ஸ்ருஷ்ட்யாதி கர்த்ருத்வங்களை செய்பவனே. ஸுகத்தைக் கொண்டவனே. காமனின் அந்தர்யாமியாக இருப்பவனே. காமதேவனே. ஸனத்குமாரனே. 

***


No comments:

Post a Comment