Friday, July 28, 2023

#223 - 657-658-659 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

657. ஸ்ரீ வீராய நம:

அதிஶக்திமந்தனுவீரநமோ நமோ நினகெ3

அதிபரிமித ஶக்தியிம் ஸர்வசராசர

பூ4தஸர்வ நின்ன அதீ4னத3ல்லிட்டுகொண்டு3 நீனு

உத்34வஸ்தி2த்யாதி33 மாடு3வி ஸர்வே வீர 

அபாரமான சக்தியை கொண்டவனே. வீரனே உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னுடைய அபாரமான சக்தியினால், அனைத்து சராசரங்களும் உன்னுடைய அதீனமாக இருக்கின்றன. நீயே ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயங்களை செய்பவன். ஸர்வேஸ்வரனே. வீரனே. 

658. ஸ்ரீ ஶுராய நம:

அப4யனு அப4யத3னுஶுரநமோ நினகெ3

அப4ஶுர நீ பூதனி ஶகட த்ருணாவர்த்த

இப4 குவலயா பீடா3 மல்லர கம்ஸ சைர்யாதி3

டா3ம்பி3கரு முர குஜஹந்தா ஸுஜனரக்ஷக 

அபயம் அளிப்பவனே. ஶுரனே உனக்கு என் நமஸ்காரங்கள். பூதனி, கட, த்ருணாவர்த்த, இப, குவலயாபீட, மல்லர்கள், கம்ஸன், முர, ஆகிய அசுரர்களை கொன்றவனே. ஸஜ்ஜனர்களின் ரக்‌ஷகனே. 

659. ஸ்ரீ ஸூரிஜனேஶ்வராய நம:

ஞானியாத3ரு ஸாமான்ய மூர்கராத3ரு 4க்தர்கெ3

நீனு ஸுக2வகொட்டு பாலிபஸூரிஜனேஶ்வரா

நமோ எம்பெ3 குப்3ஜமாலாகார வித்3வன்

மணிபாண்ட3 த்3ரௌபதி3 ஸுதா4மாதி3கெ3 ஸுக23

ஞானியானாலும், ஸாமான்ய மக்களானாலும், உன் பக்தர்கள் என்றால், நீ அவர்களுக்கு சுகத்தை கொடுத்து காக்கிறாய். ஸூரிஜனேஸ்வரனே உனக்கு என் நமஸ்காரங்கள். குப்ஜை, பாண்டவர்கள், திரௌபதி, ஸுதாமா ஆகியோருக்கு சுகத்தை அருளியவனே. 

***

No comments:

Post a Comment