ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
648. ஸ்ரீ அர்ச்சிதாய நம:
கு3ஹாதி3ந்த3 கோ3க3ளன்னு தூ3ரதந்து3 பாலிஸிதி3
அஹர்னிஶி ‘அர்ச்சிதனே’ நமோ எம்பெ3 ஸ்ரீகிருஷ்ண
மஹாலக்ஷ்மியிந்த3லு பி3ரம்மாதி3 தே3வர்க்க3ளிந்த3லு
மஹார்ஹ நீ அர்ச்சிதனாகி3ருவியோ ஸர்வோத்தம
குகைகளில் சிக்கியிருந்த பசுக்களை வெளியே கொண்டு வந்து அவற்றை காத்தவனே. இரவும் பகலுமாக அர்ச்சனை செய்யத்தக்கவனே. அர்ச்சிதனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீகிருஷ்ணனே. மஹாலட்சுமியினாலும், பிரம்மாதி தேவதைகளாலும் வணங்கத்தக்கவனே. அர்ச்சனை செய்யத்தக்கவனே. ஸர்வோத்தமனே.
649. ஸ்ரீ கும்பா4ய நம:
ஶத்ருபுரபே4த4கனே ‘கும்ப4’ நமோ நமோ நினகெ3
நரகாஸுரன கோடெ சே2தி3ஸிதி3 யது3பதே
த4ரெயு ஜ்வலிஸிது நின்ன ஸுந்த3ர ஜேஜஸ்ஸிந்த3
பூ4பா4ர இளிஸி ஆஹ்லாத3வித்தி லோகக்கெ கிருஷ்ண
எதிரிகளின் புரங்களை அழிப்பவனே. கும்பனே உனக்கு என் நமஸ்காரங்கள். நரகாஸுரனின் கோட்டையை அழித்தவனே. யதுபதியே. உன்னுடைய அழகான தேஜஸ்ஸினால் இந்த பூமியே ஜொலித்தது. பூமியின் பாரத்தை குறைத்து, நீ இந்த உலகிற்கு (பூமாதேவிக்கு) நிம்மதியை அளித்தாய். கிருஷ்ணனே.
650. ஸ்ரீ விஷுத்3தா4த்மனே நம:
விமல ப3ஹு ஷுசி யக்ஞபோஷக ‘விஷுத்3தா4த்மா’
நமோ ஸர்வதோ3ஷ ரஹித நிர்லேப ஸுபவித்ர
ஸ்வாமி நீ புண்ட3ரீகாக்ஷ வாமன பா4மன க3ங்கா3
நிர்மல ஸரித் ஶ்ரேஷ்ட ஜனக நமோ த்ரிவிக்ரம
அபாரமான, களங்கமற்ற யக்ஞங்களை காப்பவனே. விஷுத்தாத்மனே உனக்கு என் நமஸ்காரங்கள். எவ்வித தோஷங்களும் அற்றவனே. எவ்வித குறைகளும் அற்றவனே. பவித்ரமானவனே. ஸ்வாமியே. நீ புண்டரீகாக்ஷனே. வாமனனே. தூய்மையான கங்கா ஜனகனே. த்ரிவிக்ரமனே.
***
No comments:
Post a Comment