ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
600. ஸ்ரீ ஶாந்திதா3ய நம:
த்3ரவ்யக்கெ புஷ்டி ஈவ ‘ஶாந்தித3’ நமோ நமோ எம்பெ3
தி3விஜரிகு3 யோக்3ய நராதி3க3ள்கு3 மோக்ஷதா3த
ஸ்ரீவரன ப்ரஸாதா3த் ‘பராம்ஶாந்தி’ ஸ்தா2 ஶாஶ்வத
ஸர்வ தத்3யோக்3ய அதி4காரிக3ளிகெ3 ஈவி ஸ்ரீபதே
வஸ்துக்களுக்கு அதன் சக்தியை கொடுப்பவனே. ஷாந்திதனே. உனக்கு என் நமஸ்காரங்கள். தேவர்களுக்கும், யோக்ய நரர்களுக்கும் மோட்சத்தை அருள்பவனே. அவரவர்கள் யோக்யதைகளுக்கேற்ப நிரந்தரமான மோட்சத்தையே அருள்கிறாய். லட்சுமிதேவியின் தலைவனே.
601. ஸ்ரீ ஸ்ரஷ்டே நம:
ப4க்தருக3ளிகெ3 த்3ரவ்ய கொடு3வவ ‘ஸ்ரஷ்டா’ நமோ
ஜக3ஸ்ஸஜ்ஜன கர்தா ஆது3த3ரிந்த3 ‘ஸ்ரஷ்டா’ நீனு
ஏகாத்மா நாபி4பத்மதி3 படெ3தி3 பி3ரம்மதே3வன்ன
ஆ கஞ்சஜகெ போ4தி3ஸி ஹொக்கு க்ருதி நடெ3ஸுதி
பக்தர்களுக்கு அவர்களின் இஷ்டங்களை நிறைவேற்றுபவனே ஸ்ரஷ்டனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸஜ்ஜனர்களை அருள்கிறாய் ஆகையால் நீ ஸ்ரஷ்டா. ஏகாத்மனே. பிரம்மதேவனை உன் நாபியில் படைத்தவனே. பிரம்மனுக்கு தத்வஞானத்தை போதித்து, அருளினாய்.
602. ஸ்ரீ குமுதா3ய நம:
பூ4மியலி ப்ரஸித்3தா3னந்தா3னுப4வவான் ‘குமுத3’
நமோ எம்பெ3 ஆனந்த3லீலெயிம் ஜக3ஸ்ஸ்ருஷ்டி மாடி3
பூ4மியலி ஆனந்த3லீலாவதார மாடி3 நீனு
பூ4மி பா4ரவ இளிஸி ஸுக2 க்ஷேமவ கொடு3வி
பூமியில் பிரஸித்தமானவன், அனுபவம் மிக்கவன். குமுதனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஆனந்த லீலையினால் ஜகத் ஸ்ருஷ்டியை செய்கிறாய். அந்த பூமியில் உன் லீலையினால் அவதாரங்களை செய்து, பூமியின் பாரத்தினை இறக்குகிறாய். மக்களுக்கு சுக, க்ஷேமங்களை கொடுக்கிறாய்.
***
No comments:
Post a Comment