Wednesday, July 5, 2023

#202 - 594-595-596 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

594. ஸ்ரீ ஸன்யாஸ க்ருச்சம நம:

கர்மன்யாஸ மாடு3 ஶமாதி3 கு3ணதா3 நீனு

ஸன்யாஸ க்ருச்சனுநமோ நமோ எம்பெ3னொ நினகெ3

காம்ய கர்மத்யாக மத்து தோ3ஷத்யாக3 மாடி3ஸுவி

ஶம ஆனந்த3 ஞானாதி33ளன்னித்து ஸந்தெயிஸுவி 

ஜீவர்களின் கர்மங்களை அழிப்பவனே. ஷம முதலான குணங்களை அவர்களுக்கு அளிப்பவனே. ஸன்யாஸ க்ருச்சனே - உனக்கு என் நமஸ்காரங்கள். காம்ய கர்மங்களை மற்றும் அதிலிருந்து வருவதான தோஷங்களை நீ விடுவிப்பாய். ஷம, ஆனந்த, ஞானம் ஆகியவற்றை கொடுத்து உன் பக்தர்களை நீ காக்கிறாய். 

595. ஸ்ரீ ஶாந்தாய நம:

ஸாமாதி3 கு3ணவந்தரிகெ3 ஸோம ப்ராப்தி மாடு3வி

நமோஶாந்தாதை3த்யர நாஷ மாடு3வி நாரஸிம்ஹ

ஸௌம்ய 4க்தர கஷ்ட நாஶமாடி3 விக்ஞானவித்து

ஸம்யகு3பாஸனெ கெ3யிஸி ஞான ஸுக2வீவி ஸ்ரீ 

நற்குணங்களைக் கொண்டவர்களுக்கு, அமிர்தத்தை நீ கொடுக்கிறாய். ஷாந்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். தைத்யர்களை அழிப்பவனே. நாரஸிம்ஹனே. உன் பக்தர்களுக்கு யதார்த்த ஞானத்தை அளித்து, அவர்களை உபாஸனை செய்ய வைத்து, அவர்களின் கஷ்டங்களை போக்குகிறாய். கடைசியில் முக்தியை அளிக்கிறாய். 

596. ஸ்ரீ நிஷ்டா2 நம:

சோர நாஶகநிஷ்டா2நமோ நமோ எம்பெ3 நினகெ3

ஸ்தி2ரவாகி3 4க்தரலி இருவவனு நிஷ்டா2 நீ

சோரரு நின்ன கு3ணரூப மரெமாடி3 தாவேவெ

ஶ்வரோஹம்எம்பு3வரு அந்த2 3ஸ்யு நா மாள்பி 

துஷ்டர்களை அழிப்பவனே. நிஷ்டனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களில் நிலையாக நின்றிருப்பவன் நீயே. துஷ்டர்கள் (மாயாவாதிகள்) உன்னுடைய குணங்களை மறைத்து, தாமே ஈஸ்வரன் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அத்தகையவர்களை நீ அழிக்கிறாய். 

***


No comments:

Post a Comment