ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
666. ஸ்ரீ காமபாலாய நம:
ஸர்வப4க்த இச்சித ஆயா மனஸ்ஸலி ரக்ஷிப
ஸ்ரீவரனெ ‘காமபால’ நமோ எம்பெ3 ஸர்வபால
தே3வ நின்னய ப்ரஸார காமதி3 ப4ஜிபரன்ன
ஸர்வதா3 பாலிஸுவி ப்ரத்4யும்னன பித ஸ்ரீகிருஷ்ண
பக்தர்கள் விரும்பும் விஷயங்களை அந்தந்த மனதில் கொடுத்து அவர்களை காக்கும் ஸ்ரீவரனே, காமபாலனே, உனக்கு என் நமஸ்காரங்கள். அனைவரையும் காக்கும் தேவனே. உன்னை அன்புடன் வணங்கும் பக்தர்களை எப்போதும் காக்கிறாய். ப்ரத்யும்னனின் பிதனே ஸ்ரீகிருஷ்ணனே.
667. ஸ்ரீ காமினே நம:
ஸகல ஆயுத4க3ளன்னு அஸுரர கையிந்த3
அக3லிஸி நிவாரண மாள்ப ‘காமி’ நமோ எம்பெ3
ஸகல ஜக3த்ரக்ஷண இச்செயுள்ளவ ஸ்வாமி நீ
ப4க்தர்க3ள ஸாது4 இச்சாஸாத4ன நின்ன அதீ4ன
அனைத்து ஆயுதங்களையும் அசுரர்களின் கைகளிலிருந்து விலக்கி, ஸஜ்ஜனர்களுக்கு நிவாரணம் அளிக்கும் காமினே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து உலகைக்கும் காக்கும் விருப்பம் கொண்டவன் நீ. பக்தர்களின், ஸாதுக்களின் விருப்பத்திற்கு ஸாதனமான விஷயங்கள் உன்னுடைய அதீனமாகவே இருக்கின்றன.
668. ஸ்ரீ காந்தாய நம:
ஸுக2ப்ராப்தி விஸ்தாரமாள்ப ‘காந்த’ நமோ நினகெ3
ஸுக2 உன்னாஹ விஸ்தார கர்த்ரு உதா3ரகருணி
ஸுக2மயனெ சின்மயனெ நின்னய ஸுமனோஹர
அகளங்கரூப நின்னிச்செயிம் ப4க்தர்கெ3தோருவி
பக்தர்களுக்கு சுகப்ராப்தியை அபாரமாக அளிப்பவனே. காந்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். சுகத்தை அதிகமாக ஏராளமாக கொடுக்கும் கருணைக்கடலே. சுகமயனே. சின்மயனே. உன் மனோஹர களங்கமற்ற ரூபத்தினை, உன் இஷ்டப்படியே உன் பக்தர்களுக்கு காட்டுவாய்.
***