Saturday, May 20, 2023

#170 - 497-498-499-500 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

497. ஸ்ரீ பூ4தமஹேஶ்வராய நம:

ஶ்வோத்தம ரத2கெ ஶ்வரபூ4தமஹேஶ்வர

நா ஸதா3 நமோ எம்பெ3 தே3ஹாக்ய ரதே2ஶ்வர ப்ராண

ஸுநாமதி3 நீ ஸ்ரீ ஹ்ரீ ஸமேத குளிதிருவி

ஹே ஸர்வபூ4 மஹேஶ்வரனே நமோ வாயுஸேவ்ய 

மிகச் சிறந்த குதிரைகள் கொண்ட ரதத்தை கொண்டவனே. பூதமஹேஶ்வரனே உனக்கு என் நமஸ்காரங்கள். தேகம் என்னும் இந்த ரதத்தில், லட்சுமிதேவி சகிதமான ப்ராண என்னும் பெயரில் நீ அமர்ந்திருக்கிறாய். ஸர்வபூத மஹேஶ்வரனே. வாயுதேவரால் வணங்கப்படுபவனே. 

498. ஸ்ரீ ஆதி3தே3வாய நம:

ப்ராத2மிகவாகி3 ஸோமபான மாள்பஆதி3தே3

ஸதா3 நமோ யக்ஞபூஜா ஸேவா நைவேத்3யக3ளன்ன

மொத3லு அர்ப்பிஸல்பட்டு ஸ்வீகரிஸுவி ராஜஸூ

யாதி3 மொத3 பூஜெய கொண்ட3த்3து3 லோகப்ரஸித்33 

முதன்முதலில் அமிர்தத்தை படைத்தவனே. ஆதிதேவனே. உனக்கு என் நமஸ்காரங்கள். யக்ஞங்கள், பூஜைகள், ஸேவைகள், நைவேத்ய அன்ன, ஆகியவை அர்ப்பிக்கப்பட்டு அதனை நீ ஏற்றுக் கொள்கிறாய். ராஜஸூயாதி யாகங்களை நீ ஏற்றுக் கொண்டது, உலகப் புகழ்பெற்ற செய்தியாக இருக்கிறது. 

499. ஸ்ரீ மஹாதே3வாய நம:

3ஹுகர்மகர்தமஹாதே3நமோ நமோ எம்பெ3

மஹதா3தி3 ஸர்வபூ4 ஸ்ருஷ்டி மொத3லாத3 கர்ம

மஹானந்த3 லீலெயா ஸ்வதந்த்ரதி3 மாடு3வி நீனு

மஹி ஸ்ரீ ஸர்வமுக்தாமுக்த நியந்த்ரு ஸர்வே 

பற்பல செயல்களை செய்பவனே. மஹாதேவனே. உனக்கு என் நமஸ்காரங்கள். மஹதாதி அனைத்து தத்வங்களை படைத்தவனே. இந்த செயல்களை உன் லீலையினால், ஸ்வதந்த்ரமாக செய்பவனே. லட்சுமிதேவியின் தலைவனே. அனைத்து முக்தர்கள், அமுக்தர்களுக்கும் நியமனம் செய்பவனே. ஸர்வேனே. 

500. ஸ்ரீ தே3வேஶாய நம:

ஶத்ருக3 ஸோலிஸுவ இச்செயுள்ளவனு நீனு

ஸ்தோத்ர ஸ்வாமியுதே3வேநமோ எம்பெ3 சதுராத்ம

ஒந்தொ3ந்து3 அக்ஷரதொ3ளிஹவு கு3ணக்ரியாரூப

ஹே தே3வதெக3 ஶனே ஶரனு ஶரணெம்பெ3 

எதிரிகளை வெல்லும் விருப்பம் கொண்டவன் நீ. ஸ்தோத்திரம் செய்யப்படுபவனே. தேவேனே. உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து அக்‌ஷரங்களிலும் நீ இருக்கிறாய். குண, க்ரியா ரூபனாக இருப்பவனே. தேவதைகளின் ஈனே. உன்னை நான் வணங்குகிறேன்.

***

Friday, May 19, 2023

#169 - 494-495-496 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

494. ஸ்ரீ 33ஸ்தி2நேமியே நம:

ஸுக2ப்ராப்தி மாடு3வவ33ஸ்தி2நேமியேநமோ

ஸுக2ஞான ஹிதகர தேஜ:ப்ரவர்த்தக நீனு

ப்ரகாஶிஸுவ தேஜ:புஞ்ச சக்ர ஹிடிதி3ருவி

ஆர்கேந்து பா4ஸகனு ஶ்ரயனு ஜ்யோதிர்மயனு 

ஸுக ப்ராப்தியை கொடுப்பவனே. கபஸ்திநேமியே உனக்கு என் நமஸ்காரங்கள். சுகத்தை, ஞானத்தை, தேஜஸ்ஸினை கொடுப்பவன் நீ. ஒளிர்வதான தேஜஸ் கொண்ட சக்கரத்தை பிடித்திருப்பவன் நீ. சந்திர, சூரிய, நட்சத்திரங்களுக்கு நீயே ஒளியை கொடுக்கிறாய். ஜோதிர்மயனே.

495. ஸ்ரீ ஸத்வஸ்தாய நம:

4க்தர மனஸலி இருவவனுஸத்வஸ்த2னே

ஸதா3 நமோ 4க்திவர்த்திஸி ராஜிஸுவி ஹ்ருஜ்யோதி

நிர்தோ3 கல்யாண கு3 நிதி4யே நிகூட4னாகி3

ஸதா3 அந்தர்யாமியாகி3ருதியோ நீ ஸ்ரீஸமேத 

பக்தர்களின் மனதில் இருப்பவனே. ஸத்வஸ்தனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களில் பக்தியை வளர்த்து அங்கு நீ இருப்பாய். நிர்தோஷனே. கல்யாண குணநிதியே. ஸ்ரீலட்சுமிதேவி சமேதனாக நீ எப்போதும் அனைவரிலும் அந்தர்யாமியாக இருக்கிறாய். 

496. ஸ்ரீ ஸிம்ஹாய நம:

ரத2ஸங்க3தவாத3 அனேக ஶ்வவந்தஸிம்ஹ

ஸதா3 நமோ நமோ நினகெ3 ஹ்ருஷிகே ஸர்வே

மாத4வனே நீ ஸ்ரேஷ்ட நினகெ3 ஸம ஸ்ரேஷ்டரில்ல

மோத3மய ஸாராத்மா நிர்தோ3 கு3ணபூர்ண ஸிம்ஹ 

பற்பல குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தை கொண்டவனே. ஸிம்ஹனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஹ்ருஷிகேனே. ஸர்வேனே. மாதவனே. நீயே சிறந்தவன். உனக்கு சமமோ, சிறந்தவரோ வேறு யாரும் இல்லை. ஆனந்தமயனே. ஸாராத்மனே. நிர்தோஷனே. குண பூர்ணனே. ஸிம்ஹனே. 

***

Thursday, May 18, 2023

#168 - 491-492-493 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

 491. ஸ்ரீ ஸஹஸ்ராம்ஶவே நம:

ப்ரக்2யாத த்3யாவப்ருது2வி வ்யாபகனெஸஹஸ்ராம்ஶு

43வான் நமோ ஞான தேஜஸ்புஞ்ச அமிதாம்ஶு

ஜகி3ஜகி3 ஜ்யோதிர்மய ஸுத3ர்ஶனதா4ரியே

அகளங்க ஸுக்ஞானி 4க்தரலி ப்ரஜ்வலிஸுதி 

அனைத்து உலகங்களிலும் வ்யாபித்திருப்பவனே. ஸஹஸ்ராம்னே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஞான, தேஜஸ்ஸினை அபாரமான கொண்டிருப்பவனே. ஒளிர்பவனே. ஸுதர்சன சக்கரத்தை தாங்கியவனே. களங்கமற்றவனே. ஸுக்ஞானியே. பக்தர்களில் நீ ஒளிர்கிறாய். 

492. ஸ்ரீ விதா4த்ரே நம:

விஶேஷேண ஸோமபான மாடு3விதா4தாநமோ

விஶேஷேண தா4ரகனு நீ ஆது33ரிம் விதா4தா

ஹ்ரீ ஸ்ரீ ஸமேத 3ருடோ3பரி குளிதிருவி நீ

வஸுத்3ரவ்ய ரத்னாதி33 4க்தரிகெ3 கொடு3வி 

ஸோமபானத்தை செய்பவனே. விதாத்ரே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்தையும் தரித்திருப்பவனே. ஆகையால் நீ விதாதா எனப்படுகிறாய். லட்சுமிதேவியுடன் நீ கருடனில் அமர்ந்திருக்கிறாய். உன் பக்தர்களுக்கு நீ த்ரவ்ய, ரத்ன ஆகியவற்றை அருள்கிறாய். 

493. ஸ்ரீ க்ருதலக்ஷ்மணாய நம:

யதா2யோக்3 நியமேன ஸர்வரிந்த3 ப்ரார்த்த2னீய

க்ருதலக்ஷணநமோ ஸர்வ தே3 நராதி3 ஸ்வாமி

ஜக3த்ஸ்ருஷ்டி ஸ்தி2திலய நியதி ஞான அஞ்ஞான

3ந்தமோக் கர்த்ருத்வ லக்ஷணவான் ஸர்வே ஸ்ரீ 

அனைவராலும் அவரவர் யோக்யதைக்கேற்ப பிரார்த்தனை செய்யப்படுபவனே. க்ருதலக்‌ஷ்மணனே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து தேவ, நரர்களுக்கும் ஸ்வாமியே. ஜகத் ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய, நியமன, ஞான, அஞ்ஞான, பந்த, மோக்‌ஷ ஆகிய அஷ்ட கர்த்ருத்வங்களையும் செய்பவனே. ஸர்வேசனே. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே.

***