ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
461. ஸ்ரீ விமுக்தாத்மனே நம:
விஶேஷ லாப4யுக் த்3ரவ்யப்ரத3 ‘விமுக்தாத்மா’ நமோ
ஸ்ரீஶன பூஜாதி3 ஸேவெகு3 ஹரிப4க்த ஸேவெகு3
விஶேஷதி3 உபயோக3 லாப4 மோக்ஷ ஸாத4னவு
விஶேஷஸுக2 முக்தரிகெ3 ஸ்வாமியு விமுக்தாத்மா
விசேஷமான லாபங்களை கொடுக்கும் த்ரவ்யங்களை கொடுப்பவனே.
விமுக்தாத்மனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பூஜை, ஹரிபக்த சேவை ஆகியவற்றிற்கு மோட்சத்தையே
அளிப்பவனே. முக்தர்களுக்கு ஸ்வாமியே. விமுக்தாத்மனே.
462. ஸ்ரீ ஸர்வக்3ஞாய நம:
ஸர்வக்3ஞானவுள்ளந்தா2 ‘ஸர்வக்3ஞ’ நமோ நமோ எம்பெ3
ஸர்வகால ஸர்வதே3ஶ ஸர்வ விஷய ஞானவு
ஸர்வஸம்பூர்ணதி3 அனாலோசனெயு நினகு3ண்டு
ஸ்வதந்த்ரதி3 ஞானியு க்ஞ ஸர்வவஸ்துக்ஞ ஸர்வக்ஞ
அனைத்திலும் ஞானம் உள்ளவனே. ஸர்வக்ஞனே. உனக்கு என்
நமஸ்காரங்கள். ஸர்வ காலத்தைப் பற்றியும், ஸர்வ தேசத்தைப் பற்றியும், ஸர்வ விஷயங்களைப்
பற்றியும் ஞானத்தைக் கொண்டவனே. அனைத்திலும், முழுமையான ஞானம் உனக்கு உண்டு. ஸ்வதந்த்ரனே.
ஞானியே. அனைத்து வஸ்துகளைப் பற்றியும் ஞானம் உள்ளவனே. ஸர்வக்ஞனே.
463. ஸ்ரீ ஞானாய நம:
ஸர்வக்3ஞராத3 பி3ரம்மாதி3க3ள சேஷ்டகனு ‘ஞானம்’
ஸர்வதா3 நமோ நினகெ3 ஸக்ஞானாதி3க3ள் தே3ஹிமே
ஸ்ரவணாதி3ஜ ஞானவொத3கி3 அபரோக்ஷ்வித்து
ஸர்வத3லி நீ இஷ்டஞான ஜ்வலிஸி பாலிஸுவி
ஸர்வக்ஞர்களான பிரம்மாதிகளை செயல்களை செய்விப்பவனே.
ஞானனே. உனக்கு என் நமஸ்காரங்கள். எனக்கு யதார்த்த ஞானத்தை அருள்வாயாக. ஸ்ரவணங்களால்
ஞானத்தை அருளி, அபரோக்ஷத்தை அளிப்பவனே. அனைத்திலும் நீ உன் இஷ்டப்படியே இருந்து அனைவரையும்
காக்கிறாய்.
***
No comments:
Post a Comment