Friday, August 11, 2023

#237 - 699-700-701 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

699. ஸ்ரீ புண்யாய நம:

ஸுபவித்ரனாகி3ருவிபுண்யனேநமோ எம்பெ3

ஹே புண்டரிகாக் நீ பவித்ரகரனு நின்னய

ரூப கு3ணோத்கர்ஷகதா2 அவதார லீலெக3ளு

தப்பதெ3 ஶ்ரவணமாடி3 ஸ்மரிஸெ பாபஹரவு 

மிகவும் பவித்ரமானவனே. புண்யனே. உனக்கு என் நமஸ்காரங்கள். புண்டரிகாக்‌ஷனே. நீ அனைத்தையும் பவித்ரம் ஆக்குகிறாய். உன்னுடைய ரூப, குணங்கள் நிறைந்ததான உன்னுடைய கதா அவதார லீலைகளை தவறாமல் கேட்டு, நினைத்துக் கொண்டால், பாவங்கள் அழிந்துவிடும். 

700. ஸ்ரீ புண்யகீர்த்தயே நம:

வித்தத்3ரவ்ய 4னாதி3 நாஶயில்லத3புண்யகீர்த்தி

ஸதா3 நமோ எம்பெ3 நினகெ3 ஹே புண்யகர ஶஸ்வி

மாத4வனெ நின்னய கு3ணாதி33 கீர்த்திஸுவ

4க்தரிகெ3 பாப ஹோகி3 புண்யலாப4 ஆகு3வுது 

செல்வம், தன, தானியங்கள் ஆகியவற்றின் அழிவு இல்லாத புண்யகீர்த்தயே உனக்கு என் நமஸ்காரங்கள். புகழ்பெற்றவனே. மாதவனே. உன்னுடைய குணங்களை போற்றும் பக்தர்களுக்கு பாவங்கள் விலகி, புண்யங்கள் கிடைக்கின்றன. 

701. ஸ்ரீ அனாமயாய நம:

வனஜப4வக்ருத ஸ்தோத்ரகோசரஅனாமய

அனமோ நினகெ3ம்பெ3 ஸதா3 நிராமய நிர்தோ3

ஜனனாதி3 4வரோக3 நினகி3ல்ல நிர்ஜரனு

அனந்தானந்த ஞானாதி3பூர்ண அப4 அம்ருத 

பிரம்மன் செய்த ஸ்தோத்ரங்களுக்கு தரிசனம் அளித்தவனே. அனாமயனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பவித்ரமானவனே. தோஷங்கள் அற்றவனே. ஜனனம், மரணம் ஆகிய சம்சார ரோகங்கள் உனக்கு இல்லை. மாற்றம் இல்லாதவனே. அனந்தானந்த ஞானாதி பூர்ணனே. அபயனே. அம்ருதனே. 

***


No comments:

Post a Comment