Tuesday, August 15, 2023

#241 - 711-712-713 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

711. ஸ்ரீ ஸத்33தயே நம:

ஸ்வஸ்தா2 3ருவந்தஸத்33திநமோ நமோ எம்பெ3

ஸாது4 ஸஜ்ஜன 3ம்ய ஆது33ரிம் ஸத்33தி நீனு

ஸத்தாதி3தா3 நீ 33னத3லி சலிஸுவந்த2

நக்ஷத்ராதி33 3தி நியாமகனாகி3ருவி 

முக்தி கிடைக்கும் இடமான ஸத்கதயே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸாது, ஸஜ்ஜனர்களால் அறியப்படுபவனே. ஆகையால், நீயே ஸத்கதி. ஸத்தாதி ப்ரதனே (அனைத்து சக்திகளையும் கொடுப்பவனே). வானில் நகர்வதான நட்சத்திரங்களின் வேகத்தை நியமிப்பவன் நீயே. 

712. ஸ்ரீ ஸத்க்ருதயே நம:

ஸித்3யாதி33ளீவ க்ரியா மாள்பஸத்க்ருதியேநமோ

ஸத்யவாத3 ஜக3த்ஸ்ருஷ்டி மொத3லாத3 மாடு3வி

4க்த யத்னிப ஸத்ஸாத4 பூரயிஸி 2லவீவி

க்ருதிதே3விபதி ப்ரத்3யும்ன நமோ நமோ நினகெ3 

முக்திகளை கொடுக்கும் செயல்களை செய்விக்கும் ஸத்க்ருதியே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸத்யமான இந்த ஜகத்தினை ஸ்ருஷ்டி (ஸ்திதி, லய) ஆகிய செயல்களை செய்கிறாய். பக்தர்கள் செய்யும் ஸத் ஸாதனங்களை நிறைவேற்றி, அதற்கு ஏற்றதான பலன்களை அளிக்கிறாய். க்ருதிதேவியின் பதியே. ப்ரத்யும்னனே. 

713. ஸ்ரீ ஸத்தாயை நம:

க்3ருஹத3ல்லி கூதுகொம்ப3ஸத்தாநமோ நமோ எம்பெ3

தே3ஹினாம் அந்த த்4ருவாயஎந்து3 பா43வதவுக்தி

பி3ரம்மாதி3ஸர்வ சர அசரக்கு ஸத்தாதிதா3

மஹாமஹிம நின்ன இருவிகெ ஸ்வாதந்த்ர்யதி3ந்த3 

வீடுகளில் நிலைத்திருப்பவனே ஸத்தாயே உனக்கு என் நமஸ்காரங்கள். பாகவத வாக்கியம் - தேஹினாம் அந்த த்ருவாய - என்று சொல்வதைப் போல, பிரம்மாதி அனைத்து சரா சர ஜீவர்களுக்கும் ஸத்தாதி ப்ரதனே (அனைத்து சக்திகளையும் கொடுப்பவனே). மஹாமகிமனே. நீயே ஸ்வாதந்த்ர்யன். 

***


No comments:

Post a Comment