ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
729. ஸ்ரீ விஶ்வமூர்த்தயே நம:
உத்திஷ்ட ஸர்வோத்தமத்வ லக்ஷணவான் ‘விஶ்வமூர்த்தி’
ஸதா3 நமோ ஆம்னாயகு அமித ஸுகு3ணபூர்ண
எது3ரில்ல யாரூ நின்ன கு3ணரூபாதி3க3ளிகெ3
ப்ரதா4ன வாயு நின்ன உத்க்ருஷ்ட ப்ரதிமா ஆகி3ஹ
உத்தமமான ஸர்வோத்தமத்வ லட்சணங்களைக் கொண்டவன். விஸ்வமூர்த்தியே உனக்கு என் நமஸ்காரங்கள். தேவதைகளில் அபாரமான ஸுகுணபூர்ணன். உன்னுடைய குண ரூபங்களுக்கு சரிசமம் என்று யாரும் இல்லை. ப்ரதான வாயுவானவர், உன்னுடைய சிறந்ததான பிரதிமை எனப்படுகிறார்.
730.ஸ்ரீ மஹாமூர்த்தயே நம:
ப3ஹுரூபவந்தனே ‘மஹாமூர்த்தி’ நமோ நினகெ3
பி3ரம்மாண்ட3 விராட்3ரூபமூர்த்தி மஹாபுருஷ நீனு
மஹா அனந்தரூப ஶாஶ்வத நிராமயனு
மஹதா3தி3 த்ருணாந்த ஸர்வதொ3ளு அந்தர்க3தனு
பற்பல ரூபங்களைக் கொண்டவனே. மஹாமூர்த்தயே உனக்கு என் நமஸ்காரங்கள். பிரம்மாண்ட விராட ரூப மூர்த்தியே. மகாபுருஷனே. மஹா அனந்தரூபனே. நிரந்தரமானவனே. தூய்மையானவனே. மஹத்திலிருந்து த்ருண வரைக்கும் அனைத்திலும் அந்தர்கதனாக இருப்பவனே.
731. ஸ்ரீ தீ3ப்தமூர்த்தயே நம:
ஸ்தோத்ரதி3ந்த3 ப்ரகாஶிபரூப ‘தீ3ப்தமூர்த்தி’ நமோ
ஸ்ரீத3 மாத4வ நின்னய கு3ணரூப மஹிமெயு
த்3யோதவு ஸாமஸ்தோம வேத3வாக்ய ஸ்தோத்ரக3ளிந்த3
ஸதாக3மாதி3ந்த3லேக்ஞேய சின்மய பரஞ்யோதி
ஸ்தோத்திரங்களால் ப்ரகாசிப்பவனே (மகிழ்பவனே). தீப்தமூர்த்தயே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. மாதவனே. உன்னுடைய குண ரூப மகிமைகள், ஸாம வேதவாக்கியங்களால், ஸ்தோத்திரங்களால், ஸதாகமங்களால், புகழப்படுகின்றன. சின்மயனே. பரஞ்யோதியே.
***
No comments:
Post a Comment