ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
726. ஸ்ரீ த்3ருப்தாய நம:
ஸந்தோஷவந்தனே ‘த்3ருப்தனே’ நமோ நமோ நினகெ3
ஸந்துஷ்ட பூர்ண ஆனந்தோ3த்3ரேகதி3ந்த3 சேஷ்டிஸுவி
க்ஷிதியல்லி அவதரிஸி அவதார லீலெயிம்
ப4க்தரன்ன ரக்ஷிஸி த்3ருக்த தா3னவரன்னளிவி
ஆனந்தமயனே. த்ருப்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். திருப்தியுடன், மகிழ்ச்சியுடன் நீ செயல்களை செய்கிறாய். இந்த பூமியில் அவதரித்து, உன்னுடைய அவதார லீலைகளால், பக்தர்களை காத்து, கெட்டவர்களான அசுரர்களை கொன்றாய்.
727. ஸ்ரீ து3ர்த4ராய நம:
தடியலாக3தந்த ஸாமர்த்2யவான் ‘து3ர்த4ர’ நமோ
ஈடு இல்லத3 கு3ருதம அஸமஸாமர்த்யதி3ம்
பொட3வி ஹதி3னால்கன்னு ஹொத்திஹ மஹாகூர்மனெ
அண்ட3 சராசரைகதா4ரக அஸஹ்ய ஓஜஸ்வி
நினைத்து பார்க்க முடியாத சாமர்த்தியத்தைக் கொண்டவனே. துர்தரனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஈடு இணை இல்லாத உன்னுடைய மிகச் சிறந்த சாமர்த்தியத்தினால், 14 உலகங்களையும் தாங்கிய மகா கூர்மனே. அண்ட சராசரங்களை அனைத்தையும் தாங்கியவனே. அபாரமான தேஜஸ் கொண்டவனே.
728. ஸ்ரீ அத்3தா4பராஜிதாய நம:
அந்தர்ப3ஹிரதி3 அபராஜிதனாகி3ருவி நீ
‘அத்3தா4பராஜிதனே’ நமோ நமோ ஸதா3 நினகெ3
அவத்4யனு அஜிதனு அப்ரதிரத மஹாப3லா
நந்த3 பூர்ண அச்யுத அவ்யயனு ஸ்வதந்த்ர ஸச்சக்த
உள்ளே வெளியே என அனைத்து இடங்களிலும் இருப்பவனே. யாராலும் வெல்லப்பட முடியாதவனே. அத்தாபராஜிதனே உனக்கு என் நமஸ்காரங்கள். தோற்கடிக்கப்பட முடியாதவன். மஹா பலனே. வீரனே. ஆனந்த பூர்ணனே. அழிவில்லாதவனே. ஸர்வோத்தமனே. ஸ்வதந்த்ரனே. அபாரமான வீரம் கொண்டவனே.
***
No comments:
Post a Comment