Saturday, August 12, 2023

#238 - 702-703-704 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

702. ஸ்ரீ மனோஜவாய நம:

மன்மத2 தி3க்கரிஸுவமனோஜவநமஸ்தே

மன்மதகு3 கோட்யமித ஸுந்த3ரனு ஸ்ரீவாமன

மனஸிகு3 அத்யதி4 வேக3மனஸோ ஜவியோ

நைனத்3தே3வா ஆப்னுவன் பூர்வமர்ஷத்எந்து3 ஶ்ருதி 

மன்மதனை விட அழகானவனே. மனோஜவனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீவாமனனே. மனதை விட அதிக வேகமானவனே. மனஸோ ஜவியோ என்னும் ஸ்ருதியும் இதையே சொல்லி உன்னை புகழ்கிறது. 

703. ஸ்ரீ தீர்த்த2கராய நம:

ஸ்தோத்ர ஸேவியோதீர்த்த2கரனேநமோ நமோ எம்பெ3

இதிஹாஸ பா43வத புராண பி3ரம்மஸூத்ராதி3

ஶாஸ்த்ரக்ருத் வேத3வ்யாஸ ஹயமுக2ரூப ஸர்வக்ஞ

பவித்ர மாள்புது3 நின்ன உத்க்ருஷ்ட நாமக3ளு 

ஸ்தோத்ரங்களை ஏற்றுக் கொள்பவனே. தீர்த்தகரனே உனக்கு என் நமஸ்காரங்கள். இதிகாச, பாகவத, புராண, பிரம்மஸூத்ர முதலிய சாஸ்திரங்களை இயற்றிய வேதவ்யாஸனே. ஹயக்ரீவனே. ஸர்வக்ஞனே. உன்னுடைய மிகச்சிறந்த நாமங்கள் அனைவரையும் பவித்ரம் ஆக்குகிறது. 

704. ஸ்ரீ வஸுரேதஸே நம:

ஸ்வரூப ஆச்சாத3 அஞ்ஞானாதி3 நாஶக

வஸுரேதாநமோ பாபாதி3கர்ம அக்3னியிம் தூல

ராஶியுக் 4ஸ்மவாகு3வதெரதி3 அஞ்ஞானாதி3

நா மாடு3விவஸுரேதஸ்அக்னிப்ரகா வீர்ய 

ஸ்வரூபத்தை மூடுவதான அஞ்ஞானம் முதலான தோஷங்களை போக்குபவனே. வஸுரேதஸே உனக்கு என் நமஸ்காரங்கள். பாபாதி கர்மங்கள், அக்னியில் பஸ்மம் ஆவதைப் போல, நீ அனைத்து அஞ்ஞானங்களையும் அழிக்கிறாய். வஸுரேதஸே. அக்னியைப் போல ஒளிர்பவனே. வீர்யனே. 

***

No comments:

Post a Comment