Saturday, February 25, 2023

#104 - 297-298-299 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

 297. ஸ்ரீ பவனாய நம:

ப4க்தரனு பவித்ர மாடு3வ ‘பவனனே’ நமோ

ஸதா3 ஸர்வத்ரத3லி பவித்ரமாடு3வ ஸ்வபா4வ

பா1தா1ப1ரேஶ வரேண்ய அப4ய அம்ருதோத்தம

வந்த்3யதம ஸர்வவந்த்3ய நாராயணனு ப1வன 

பக்தர்களை பவித்ரம் ஆக்கும் பவனனே. உனக்கு என் நமஸ்காரங்கள். எப்போதும் அனைத்து இடங்களையும் பவித்ரம் ஆக்குபவனே. அம்ருதோத்தமனே. அனைவராலும் வணங்கத்தக்கவனே. நாராயணனே. பவனனே. 

298. ஸ்ரீ பாவனாய நம:

மன்வாதி3 ராஜ ஸம்ரக்‌ஷணெ மாள்ப ‘பாவன’ நமோ

மனு ஸ்வாயம்பு4வ ஈஶயக்ஞ நின்ன துதிஸலு

நீனு ராக்‌ஷஸரன்ன கொந்து3 ஆ மனுவ ரக்‌ஷிஸிதி3

மீனரூபதி3 ஸத்ய வ்ரதன்ன காய்தி3 நீ பாவன 

மனு முதலாக அனைத்து அரசர்களையும் காப்பவனே. பாவனனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்வாயம்புவ மனுவானவன், உன்னை ஈஶாவாஸ்யத்தினால் துதிக்க, அசுரர்களை நீ கொன்று, அவனை காத்தாய். மீன ரூபத்தினால், ஸத்ய வ்ரதனை காத்தாய். ஹே பாவனனே. 

299. ஸ்ரீ அனிலாய நம:

அதி உத3கவீவனு ‘அனில’ நமோ நினகெ3

ப4க்தி அனுராக3 ரூப ஸ்னேஹகாஶ்ரய நீனு

ஒத3கி3ஸுவி ஸ்னேஹவ முக்2யவாய்வந்தர்யாமி நீ

ஆதா4ர ஸர்வக்கு நீ ஆஸ்ரய ரஹித ஸர்வேஶ 

அதிகமான மழையினை தருபவனே அனிலனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தி, வைராக்ய, நட்புக்கு நீயே ஆதாரமானவன். அனைவரிலும் நட்பினை கொடுப்பவன் நீயே. அனைவரிலும் அந்தர்யாமியாக இருப்பவன் நீ. அனைத்திற்கும் நீயே ஆதாரமானவன். உனக்கு யாருடைய ஆதாரமும் தேவையில்லை. ஸர்வேஶனே.

***


Friday, February 24, 2023

#103 - 294-295-296 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

 294. ஸ்ரீ ஜக3தஸ்ஸேதவே நம:

மைத்ரிஸுக2 சர்ய ஸஜ்ஜனரிகெ3 ஜக3த்தினல்லி

உத்தம ரீதியலி ஒத3கு3வ ‘ஜக3த3ஸ்ஸேது:’

ஸதா3 நமோ எம்பெ3 ஶுப4க்கெ ஶுப4 பாபக்கெ பாப

ஒத3கி3ஸுவி ஜக3த்திகெ3 மித்ரரிகெ3 ஶுப4வா 

இந்த உலகில் ஸஜ்ஜனர்களுக்கு உத்தமமான ரீதியில் அருளும் ‘ஜகதஸ்ஸேதுவே’ உனக்கு என் நமஸ்காரங்கள். ஶுபத்திற்கு ஶுபத்தையும், பாவத்திற்கு பாவத்தையும் அருள்கிறாய். உன்னுடைய பக்தர்களுக்கு ஶுபத்தையே கொடுக்கிறாய். 

295. ஸ்ரீ ஸத்யதர்ம பராக்ரமாய நம:

சித்ரஜக3த் ஸ்ருஷ்டி கர்த்ருத்வ லக்‌ஷணனு மத்து

ஶத்ரு நாஶாயுத4தா3ரி ‘ஸத்யத4ர்ம பராக்ரம’

ஸதா3 நமோ ஜக3தாஶ்ரயதா4ரக வஶீ

ஶத்ரு மத்து அத4ம நாஶக உருப3ல பூர்ண 

பல விதமான ஜீவர்களைக் கொண்ட ஜகத்தினை படைத்த கர்த்ருத்வத்தைக் கொண்டவன். எதிரிகளை அழிக்கவல்ல ஆயுதங்களை தரித்ஹ்டவனே. ஸத்யதர்ம பராக்ரமனே உனக்கு என் நமஸ்காரங்கள். உலகத்தின் ஆதாரமானவனே. அதமர்களை அழிப்பவனே. பலபூர்ணனே.

***


 

296. ஸ்ரீ பூ4தப4வ்ய ப4வ நாதா2ய நம:

ப்ரஸித்3த4 வஜ்ராயுதா3தி3க3ள தீக்‌ஷ்ணகரிஸுவ

பே3ஸரிப ருணபரிஹாரக்கெ ப்ரார்த்த2னாயோக்3ய

ஸுஸமர்த்த2 ‘பூ4தப4வ்யப4வன்னாத2’ நமோ எம்பெ3

ஐஶ்வர்ய ஸ்வாமித்வ த்ரிகாலதி3 ஸித்3த4வு நின்னல்லி

 

புகழ்பெற்ற வஜ்ராயுதங்களை / வஜ்ராயுதங்களை ஏந்தியவர்களை கூர்மையாக்குபவனே. நம்மை பின் தொடர்ந்து வரும் ருணங்களின் பரிகாரத்திற்காக பிரார்த்தனை செய்வதற்கு யோக்யமானவனே. சொந்தமான சிறந்த சாமர்த்தியத்தைக் கொண்டவனே. பூதபவ்ய பவன்னாதனே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து செல்வங்களையும், உத்தமத்வத்தையும் எப்போதும் நீ உன்னில் கொண்டிருக்கிறாய்.

Thursday, February 23, 2023

#102 - 291-292-293 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

 291. ஸ்ரீ ஶஶிபி3ந்து3வே நம:

அதி ஶ்ரேஷ்ட ஸுக2ஸாத3ன ஆஹ்லான ஞானவந்த

ஸ்ரீத3 ‘ஶஶிபி3ந்து3’ நமோ ஞானஞ்ஞான: ஸுக2ஸுக2:

அத்யந்த ஸுக2ஸ்வரூப ஞானாத்மா ஶஶிபி3ந்து3வே

இது3 திளிது3பாஸிப ப4க்தர்கெ3 ஸுக2ஞானதா3 

மிகச் சிறந்ததான சுக சாதனமான ஞானத்தை கொடுப்பவனே. ஶஶிபிந்துவே உனக்கு என் நமஸ்காரங்கள். ஞான, அஞ்ஞான, சுக, துக்க, முக்தி, ஞான ஆகியவற்றை கொடுப்பவன் நீயே. இதனை அறிந்து உன்னை உபாஸனை செய்யும் பக்தர்களுக்கு சுக ஞானத்தை கொடுக்கிறாய். 

292. ஸ்ரீ ஸுரேஶ்வராய நம:

ஸுகா2னுப4வராத3 யோக்3யஜன ஸ்வாமியு நீனு

ஸுகா2த்மக ‘ஸுரேஶ்வர’ நமோ ஸதா3 நமோ எம்பெ3

முக்2ய ஸ்வாமியே நீனு ஸுரரெல்லர ஈஶ்வரனு

ஏகாந்த ப4க்தர ஹ்ருத்கமலதி3 ப்ரஜ்வலிபி 

சுகத்தை அனுபவிப்பரான முக்தி யோக்யர்களின் தலைவன் நீயே. ஸுகாத்மகனே. ஸுரேஶ்வரனே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைவருக்கும் ஸ்வாமியே. தேவர்கள் அனைவரின் ஈஸ்வரனே. உன்னுடைய ஏகாந்த பக்தர்களின் இதய கமலத்தில் நீ இருந்து ஒளிர்கிறாய். 

293. ஸ்ரீ ஔஷதா3ய நம:

புரோட3ஶ மொத3லாத3 ஹவிஸ்க்3ராஹக ‘ஔஷத3ம்’

ஶிரபா3கி3 நமோ எம்பெ3 விபு4 ஸ்ரீஷ த4ன்வந்தரி

மூரு தாப பீடி3தர ஆஶ்ரயனு ஔஷத4னு

தீவ்ர ப4வரோக3 பரிஹார து3க்க2 பே4ஷஜனு 

புரோடஶ முதலான ஹவிஸ்களை ஏற்றுக் கொள்பவனே. ஔஷதனே உன்னை தலைவணங்கி நமஸ்காரம் செய்கிறேன். தன்வந்த்ரி ரூபத்தினால், மூன்று விதமான தாபங்களையும் போக்குபவனே. அத்தகைய ஔஷதத்தினை தருபவனே. என்னுடைய சம்சார துக்கத்தினையும் பரிகாரம் செய்வாயாக.

***