Thursday, March 2, 2023

#109 - 312-313-314 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

312. ஸ்ரீ ஸஹஸ்ரஜிதே நம:

பூர்ணஸ்ய ஒத3கி3ஸுவஸஹஸ்ரஜித்நமோ எம்பெ3

ஏனெம்பெ3 நின்ன ஓஜஸ்ப3 ஸஹஸ்ர எந்தெ3னிப

3ணனெகெ3 ஹெச்சாத3 அஸுரரன்ன ஜயிஸுவி

நின்ன 3லமஹாத்ம்ய பூர்ண அரியலு ஶக்ய 

பூர்ணமானவனே. வரங்களை அளிப்பவனே. ஸஹஸ்ரஜிதனே உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னுடைய எல்லையற்ற ஆளுமை, வலிமைகளை நான் என்னவென்று சொல்வேன். அனைத்து அசுரர்களை நீ வெல்கிறாய். உன்னுடைய வலிமைகளை மகிமைகளை முழுமையாக அறிவது அசாத்தியமானது. 

313. ஸ்ரீ அனந்தஜிதே நம;

அனந்த போ4க்3 வஸ்துக3 ஈவி நீஅனந்தஜிதா

அனந்த போ4க்3 வஸ்து ஜேதா நமஸ்தே ஆப்தகாமாய

ஸ்தா2 பே43தி3ந்த3லோ கால பே43தி3ந்த3லோ நீனு

ஏனு கொரதெ இல்லத3 பூர்ண காம போ4க்3யஜேதா 

அனந்தமான போக்ய வஸ்துகளை நீ அருள்கிறாய். ஹே அனந்தஜிதனே. அந்த வஸ்துகளில் ஒளியாக நீயே இருக்கிறாய். அனைவருக்கும் ஆப்தகாமனே. கால, தேச, இடங்களால் நீ எவ்வித குறைகளும் இல்லாத பூரணமானவன். 

314. ஸ்ரீ இஷ்டாய  நம:

பரம ப்ரியனாத3வனுஇஷ்டனேநமோ எம்பெ3

பரிபரி யக்ஞதி3ந்த3 பூஜிதனாது33ரிந்த3

ஸ்ரீ ரமாபதி நீனு இஷ்டனு எந்தெ3னிஸி கொண்டி3

பரோவரிய நீனேவெ ஸ்ரேஷ்டதமனாகி3ருவி 

பரமப்ரியமானவனே. இஷ்டனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பற்பல யக்ஞங்களால் நீ பூஜிக்கப்படுவதால், ஹே ரமாபதியே, நீ இஷ்டன் எனப்படுகிறாய். நீயே ஸர்வோத்தமனாக இருக்கிறாய்.

***


No comments:

Post a Comment