Tuesday, March 21, 2023

#124 - 360-361-362 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

 ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

 360. ஸ்ரீ மஹாக்ஷாய நம:

தா3ஶீலவாகி3ருவ மன மொத3லாதி3ந்த்3ரிய

4 உதா3ரனே நினகி3வெமஹாக்நமஸ்துப்4யம்

ஏனெம்பெ3 நின்ன 3யாபூர்ண மஹா அக்ஷணிய

நின்ன கருணாத்3ருஷ்டி என்னமேலிரலி ஸதத 

கருணை நிறைந்த மனம் முதலான நற்குணங்களைக் கொண்டவனே ‘மஹாக்‌ஷனே உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னுடைய கருனையை நான் என்னவென்று சொல்லட்டும்?. உன்னுடைய கருணைப்பார்வை மிகவும் வலிமை வாய்ந்தது, அது என் மேல் எப்போதும் இருக்கட்டும். 

361. ஸ்ரீ 3ருட3த்4வஜாய நம:

யுத்த33லி ஜயகோ4 ஸின்ஹத்4வனி மொத3லாத3

ப்3ருஹத்4வனி சின்ஹவுள்ள3ருட3த்4வஜநமஸ்துப்4யம்

எது3ர்யாரோ நில்லலிக்காக3ரோ வைனதேய த்4வஜ

ஸுதை4ர்ய 3ஶீல ஜயஜயது ஜயஜய 

போரினில் ஜயகோஷம், ஸிம்ஹ த்வனி ஆகிய மிகச்சிறந்த சின்னங்களைக் கொண்ட கருடத்வஜனே உனக்கு என் நமஸ்காரங்கள். உனக்கு எதிராக யார்தான் நிற்க முடியும்?. கருடத்வஜனே, அபாரமான தைரியம், பலங்களைக் கொண்டவனே; உனக்கு வெற்றி உண்டாகட்டும். 

362. ஸ்ரீ அதுலாய நம:

அஸத்3ருஶனாகி3ருவஅதுலநமோ நினகெ3

ஸ்ரீ நினகெ3 ஸமரில்ல முக்தாமுக்தரல்லி

பி3ஸஜாஸன ஶி3வாதி33ளு ஸர்வப்ராணிக3ளு

கேஶவாதீ4னரெந்து3 ப்ரஸித்34 ஸதா33மத3ல்லி

 

முதல்மையானவனாக இருக்கும் அதுலனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. உனக்கு சமம் என முக்த அமுக்த ஜீவர்களில் யாரும் இல்லை. பிரம்ம சிவாதிகள், ஸர்வ பிராணிகள் என அனைத்தும் கேசவனின் அதீனம் என்று ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ளது.

***

No comments:

Post a Comment