ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
351. ஸ்ரீ பத்3மினே நம:
ப்ராத:கால மத்3யான்ஹ த்ருதீய ஸவனத்ரயதி3
ப4க்தவிதி4பூர்வ அர்ப்பித ஸோமாதி3 தி3வ்யவாத3
விதி4யுக்த பதா3ர்த்த2 பானாதி3ரூபதி3 கொள்ளுவி
‘பத்3மி’ நமோ மோத3மய விதி4பித பூர்ணகாம
காலையில், மதியத்தில், மாலையில் என மூன்று வேளைகளிலும்,
பக்தியுடன், விதிப்படி, அர்ப்பிக்கப்படும் ஸாத்விக பதார்த்தங்களை நீ, அதன் ரஸங்களை
ஏற்றுக்கொள்கிறாய். பத்மினே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஆனந்தமயனே. பிரம்மனின் தந்தையே.
பூர்ணகாமனே.
352. ஸ்ரீ பத்3ம நிபே4க்ஷணாய நம:
ஹிரண்யவர்ண நிப4காந்தியிந்த3 ஜ்வலிஸுவந்த2
ஶரீரவான் ‘பத்3மநிபே4க்ஷண’ நமோ நமோ எம்பெ3
அரவிந்த3வோலு ஈக்ஷணதிம் க்ருபெயிம் நோடெ3ன்ன
ப்ராக்ருத விலக்ஷண அனக4 ஞானைஶ்வர்ய பூர்ண
தங்க மயமான அபாரமான ஒளியினால் ஒளிர்பவனே. பத்ம நிபேக்ஷணனே.
உனக்கு என் நமஸ்காரங்கள். இதே நொடியில் என்னை கருணையுடன் பார்ப்பாயாக. அப்ராக்ருஷனே.
அபாரமான ஞான ஐஸ்வர்ய பூர்ணனே.
353. ஸ்ரீ பத்3மனாபாய நம:
ஸோமபான மாடு3வ ‘பத்3மனாப’ நமோ நினகெ3
கமல அரளிகெ1 மாள்ப பத்3மன: ஸூர்யனிகெ3
ஸ்வாமி நீ காந்தி கொடு3வந்த2வனு பத்3மனாப4
கமலனிப4 நாபி4வுள்ளவனு நீ பத்3மனாப4
ஸ்வாக்ய ரஸத்தை ஏற்றுக் கொள்ளும் பத்மனாபனே உனக்கு
என் நமஸ்காரங்கள். தாமரையை மலரச் செய்யும் சூரியனுக்கு ஸ்வாமி நீயே ஒளியை கொடுக்கிறாய்,
பத்மனாபனே. கமலம் இருப்பதான நாபி உள்ளவன்.
***
No comments:
Post a Comment