Thursday, March 16, 2023

#119 - 342-343-344 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

342. ஸ்ரீ புரந்த3ராய நம:

4ராத்3யுக3 ஒக்33ட்டு ஸம்ப3ந்த4க்கெ விஷயனு

புரந்த3நமோ த்4யாவாப்ருதி2வி ஆத3ரகாரி

மூரு அஸுரபுரக3ளன்னு நாஶமாடி3ஸிதி 3

து3ர்க்ரஹாதி3 4யாவரணக3ளன்ன நீகி3ஸுவி 

ஜீவர்களின் சம்சார சம்பந்தத்திற்கு காரணனே, புரந்தரனே உனக்கு என் நமஸ்காரங்கள். மூன்று உலகங்களின் நலனுக்காக, மூன்று அசுர புரங்களை (த்ரிபுராஸுர) அழித்தவனே; துர்க்ரஹங்களால் வருவதான பயங்களை போக்குபவனே. 

343. ஸ்ரீ ஶோகாய நம:

ஶோக ரஹிதனு நீனுஶோகநமோ நினகெ3

ஶோக மோஹாதி33 விரோதி4 ஸுக2ஸ்தா2 பூர்ண

ஶுக்ரனெந்து ஸ்ரீ விஷ்ணோ நினகெ3 ஹெஸரு ப்ரஸித்34

ஶுக்ரனெந்த3ரெ ஶோகரஹித எந்து3 உபநிஷத் உக்த 

ஶோகங்கள் அற்றவன் நீ. அஶோகனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஶோக, மோகங்களின் எதிரியே; ஸுகஸ்தான பூர்ணனே; உனக்கு விஷ்ணு என்று பெயர். ஶோகரஹிதன் என்று உபநிஷத் உன்னை புகழ்கிறது. 

344. ஸ்ரீ தா4ரணாய நம:

ஜனனமரணாதி3 ஸம்ஸாரதி3ந்த3 ஸஜ்ஜனர

4 3யாபூர்ண நீ தாரிஸுவிதா4ரணநமோ

இன மண்ட3லவர்த்தி ஸுக2ஞான ஜ்யோதிர்மய நீ

இனகுலதி3 ப்ராது3ர்ப4விஸிதி3 ராமசந்த்3 

ஜனன, மரண என்னும் சம்சார சுழற்சியிலிருந்து ஸஜ்ஜனர்களை காப்பவன் நீ; தயாபூர்ணனே. அனைவரையும் நீ தரித்திருக்கிறாய். தாரணனே உனக்கு என் நமஸ்காரங்கள். சூரிய மண்டலத்தில் அந்தர்யாமியாக இருப்பவனே. ஸுகஞான ஸ்வரூபனே. ஜ்யோதிர்மயனே. சூரிய குலத்தில் நீ தோன்றினாய் ராமசந்திரனாக. 

***


No comments:

Post a Comment