Thursday, September 7, 2023

#256 - 756-757-758 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

756. ஸ்ரீ ஶூன்யாய நம:

வைகுண்டாதி3க3ளல்லிருவவனு ‘ஶூன்யனே’ நமோ

ஸுகி2 ‘ஶம்’ உத்தமத்வ ‘உ’உத்தம ஸ்வரூப

ஹாகே3 ‘ஸ்வாமியதே இதி ஶூன்ய’ எம்பு3வரு நீனு

ஸுக2மயனு ஸர்வோத்தமனு ஸர்வேஶனு ஸ்வாமி 

வைகுண்டம் போன்றதான இடங்களில் இருப்பவனே. ஷூன்யனே உனக்கு என் நமஸ்காரங்கள். ‘ஸம்’ என்று சுகமாக இருப்பவனே; ‘உ’ என்று உத்தமத்வத்தை கொண்டவனே; ஆகையால், உத்தம ஸ்வரூபனே. ‘ஸ்வாமியதே இதி ஷூன்ய’ என்று வாக்கினால் போற்றப்படுபவனே. சுகமயனாக இருக்கிறாய். ஸர்வோத்தமன். ஸர்வேஷன். நீயே ஸ்வாமி. 

757. ஸ்ரீ க்4ருதாஶிஷே நம:

ஸோம க்4ருதாதி3க3ள இச்சா தோரிஸுவ ‘க்4ருதாஶி’

நமோ எம்பெ3 ஜக3த் போஷண ரக்‌ஷண ஸர்வகர்த

ஸ்வாமி கிருஷ்ண நின்னவதார ஜக3தா3ப்யாயனவு

ப்ரேமானுக்3ரஹ நீடி3 கோ3பக்3ருஹ பால்பெ3ண்ணெகொண்டி3 

சந்திரன், சூரியன் ஆகியோரின் சக்தியை காட்டும் (அவர்களுக்கு சக்தியை கொடுக்கும்) க்ருதாஷியே உனக்கு என் நமஸ்காரங்கள். உலகத்தை காப்பவனே. அனைத்து செயல்களையும் செய்பவனே. ஸ்வாமியே. கிருஷ்ண என்னும் அவதாரம் கொண்டவனே. உலகத்தைக் காப்பதற்காக வந்து, கோபர்களுக்கு பரமான்னுகிரகம் செய்து, அவர்களின் வீட்டில் பால், வெண்ணைகளை திருடினாய். 

758. ஸ்ரீ அசலாய நம:

நாஶவில்லத3வ நீனு ‘அசல’ நமோ நினகெ3

நாஶரஹித அப்ராக்ருத ப3லஞான ஆனந்த3

ஶாஶ்வத ஆதி3கு3ரு அனிர்விண்ண அவ்யயனு

தோ3ஷலேஶவு இல்லவு அபே4த்3ய ப3லாதி3 கு3ணவான் 

அழிவில்லாதவன்  நீ. அசலனே உனக்கு என் நமஸ்காரங்கள். அழிவில்லாத அப்ராக்ருத பல, ஞான, ஆனந்தத்தைக் கொண்டவனே. நிரந்தரமானவனே. ஆதிகுருவே. யாராலும் வெல்லப்பட முடியாதவனே. மாற்றங்கள் இல்லாதவனே. தோஷங்கள் அற்றவனே. வெல்லப்பட முடியாத பலம் போன்ற குணங்களை கொண்டவனே. 

***

Wednesday, September 6, 2023

#255 - 753-754-755 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

753. ஸ்ரீ சந்த3னாங்க3தி3னே நம:

தே3வர்க3ள தோ1ஷிஸுவ ஹவிஸ்ஸாதி3 அர்ப்பிஸுவ

தி3வ்யயக்3ஞ மாள்ப ப4க்தனிந்த3 பூஜ்யனாகி3ருவ

ஸ்ரீவரனே ‘சந்தனாங்க3தி3’ நமோ எம்பெ நினகெ3

ஸர்வதா3ஹ்லாத3 ஆனந்த3பூர்ண ஸ்ரீகரார்ச்சித 

தேவர்களை காப்பவனான; ஹவிஸ் ஆகியவற்றை அர்ப்பணம் செய்யும் பக்தர்களால் பூஜிக்கப்படுபவனான; ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே; சந்தனாங்கதினே உனக்கு என் நமஸ்காரங்கள். எப்போதும் ஆனந்தமயமானவனே; ஸ்ரீலட்சுமிதேவியால் பூஜிக்கப்படுபவனே. 

754. ஸ்ரீ வீரஹா நம:

விமல விஶிஷ்டஞான ஸாத4னயக்ஞ ப்ராபக

ஸ்வாமி ‘வீரஹா’ நமோ ப4க்தபோஷக ஶத்ருஹந்தா

நைமிஷாரண்ய அனிமிஷ க்‌ஷேத்ரதி3 ஞானயக்ஞ

ரமாபதி நீனு ஒத3கி3ஸுவி ஹாகெ3 என்னல்லு 

தூய்மையான, மிகச் சிறந்ததான ஞானத்தினால், யக்ஞ சாதனங்களால் அறியப்படுபவனே; ஸ்வாமியே, வீரஹா உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களை காப்பவனே. எதிரிகளை கொல்பவனே. நைமிஷாரண்ய க்‌ஷேத்திரத்தில், செய்யப்படும் ஞான யக்ஞங்களுக்கு, ஸ்ரீரமாபதியான நீ, அருள் புரிகிறாய். 

755. ஸ்ரீ விஷமாய நம:

விஶேஷவாகி3 மஹாஸாது4 ‘விஷய’ நமோ எம்பெ3

ஶேஷஶாயி ப்ரத்3யும்ன வாஸுதே3வ ஆதி3வராஹ

ஸ்ரீ நாராயணானிருத்3த4 ந்ருஸிம்ஹ ஸங்கர்ஷண

ருக் ஸாமஸ்துத்ய ஹிதகர ஸ்ரீ மன் நாராயண 

மஹா ஸாது விஷயனே. உனக்கு என் நமஸ்காரங்கள். சேஷஸாயியே. ப்ரத்யும்னனே. வாஸுதேவனே. ஆதிவராகனே. ஸ்ரீ நாராயணனே, அனிருத்தனே, நாரசிம்மனே, ஸங்கர்ஷணனே, ருக், ஸாம வேதங்களால் போற்றப்படுபவனே. பக்தர்களை அருளும் ஸ்ரீமன் நாராயணனே. 

***


Tuesday, September 5, 2023

#254 - 750-751-752 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

750. ஸ்ரீ ஸுவர்ணவர்ணாய நம:

ப4க்தர்கெ3 ஈவுதகெ3 ஸ்வர்ணேச்சாவந்தனாகி3ருவி

ஸ்ரீத3னே ‘ஸுவரணவர்ண’ நமோ எம்பெ3 லக்‌ஷ்மீபதே

வேத3 ப்ரதிபாத்3ய ஹரிருக்மவர்ண நீ நின்னன்ன

ப4க்தனிகெ3 காணிஸி யுக்தகாலதி3 மோக்‌ஷவீவி 

பக்தர்களுக்கு அருள்வதற்காக ஸ்வர்ணங்களை கொண்டிருக்கிறாய். ஸ்ரீதரனே. ஸுவர்ணவர்ணனே உனக்கு என் நமஸ்காரங்கள். லட்சுமிதேவியின் தலைவனே. வேதங்களால் போற்றப்படுபவனே. தங்கமயமானவனே. உன் பக்தர்களுக்கு நீ உன்னை காட்டிக் கொண்டு, தக்க காலத்தில் அவனுக்கு மோட்சத்தை அருள்கிறாய். 

751. ஸ்ரீ ஹேமாங்கா3ய நம:

க3மனஶீல வேக3வுள்ள ஹயக3ளிந்த3 போப

ரமாபதே ‘ஹேமாங்க3’ நமோ எம்பெ3 ஸௌந்த3ர்யஸார

ஸுமனோஹரவாத3 சாமீகர வபுஷ நீனு

அமல ஸுபூர்ணஞானக்ரியா ஸாமர்த்2யவுள்ளவ 

வாயுவேகத்தில் செல்லும் குதிரைகளில் செல்பவனான ஸ்ரீரமாதேவியின் தலைவனே. ஹேமாங்கனே. உனக்கு என் நமஸ்காரங்கள். அழகானவனே. மனதிற்கு இன்பம் தரும் அழகான வடிவம் கொண்டவன் நீ. குறைகள் அற்றதான, முழுமையான ஞான, க்ரியா ஆகிய சாமர்த்தியங்களை கொண்டவன் நீ. 

752. ஸ்ரீ வராங்கா3ய நம:

வரணீய ஶ்ரேஷ்ட ஆத3 ஸந்ததி ஹரடு3வந்த

‘வராங்க3’ நமோ பி3ரம்ம ஶிவ ஶேஷ கருட3வந்த்3ய

உத்க்ருஷ்ட ஸுவிமல கரசரணாத்3யங்க3க3ளு

ஸுக2ஞான ப3லாதி3 பூர்ணவு பே4த3 இல்லத3வு 

உன்னை வர்ணிப்பவர்களான சிறந்தவர்களான உன்னுடைய பக்தர்களால் போற்றப்படுபவனான வராங்கனே உனக்கு என் நமஸ்காரங்கள். பிரம்ம, சிவ, சேஷ, கருடர்களால் வணங்கப்படுபவனே. சிறந்ததான, அழகான, கை, கால் ஆகிய அங்கங்களை கொண்டிருக்கிறாய். சுக, ஞான, பல ஆகியவை உன்னிடம் பூரணமாக இருக்கின்றன. இவற்றில் எவ்வித பேதங்களும் இல்லை. (உன்னுடைய அவதாரங்களில், இவை எவற்றில் பேதங்கள் இல்லை). 

***


Monday, September 4, 2023

#253 - 747-748-749 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

747. ஸ்ரீ லோகநாதா2ய நம:

லோகஸ்வாமியு நீனு ‘லோகநாத2னே’ நமோ எம்பெ3

அகளங்க ஞானபூர்ண ஸர்வக்3ஞ எனிப நீனு

ப4க்தரிகெ3 அக்ஞான களெது3 ஸக்3ஞான கொடு3வ

ஸ்ரீகாந்த நீ பி3ரம்மஷிவேந்த்3ராதி3 ஸர்வரிகு3 ஸ்வாமி 

லோகஸ்வாமியே. லோகநாதனே. உனக்கு என் நமஸ்காரங்கள். அபாரமான ஞானபூர்ணனே. ஸர்வக்ஞனே. பக்தர்களின் அஞ்ஞானங்களை களைந்து, ஸுக்ஞானத்தை அருள்கிறாய். ஸ்ரீகாந்தனே. பிரம்ம, சிவ, இந்திர என அனைவருக்கும் நீயே ஸ்வாமி. 

748. ஸ்ரீ மாத4வாய நம:

ஸ்துதியிந்த3 ப்ராப்தனாகு3வ ‘மாத4வ’ நமோ எம்பெ3

ஸ்தோத்ர நின்னய ஞானானந்த3 ப3லகு3ணக3ளன்ன

ஸ்ரத்3தா4 ஸ்னேஹயுதவாகி3 இருவத3ரிந்த3 நீனு

ப்ராப்தனாகு3வி ப4க்தப்ரிய வேத3 ஸாமாதி3ஸ்துத்ய 

ஸ்துதி, ஸ்தோத்திரங்களால் அறியப்படுபவனே. மாதவனே. உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னுடைய ஞான, ஆனந்த, பல, குணங்களை ஸ்தோத்திரம் செய்தால், ஸ்ரத்தா மற்றும் நட்புடன் (பக்தியுடன்) இதனை செய்தால், நீ, தரிசனம் அளிக்கிறாய். பக்தப்ரியனே. ஸாம வேதங்களால் வணங்கப்படுபவனே. 

749. ஸ்ரீ ப4க்தவத்ஸலாய நம:

ப4க்த த4னாதி3 ப்ரேமவந்த ‘ப4க்தவத்ஸல’ நமோ

ப4க்தரு மாடு3வ யக்ஞ பூஜா அர்ப்பிஸுவ த4ன

நைவேத்3ய ஹவிஷ்யாதி3க3ள ஸ்வீகரிஸி வாத்ஸல்ய

ஹிததி3 நீ மாடு3வி ப4க்தவத்ஸல க்ருபாஸிந்து4 

அனைத்து பக்தர்களாலும் வணங்கப்படுபவனே. பக்தவத்ஸலனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்கள் செய்யும் யக்ஞ, பூஜைகளுக்கு; அவர்கள் அர்ப்பணம் செய்யும் செல்வம், நைவேத்தியம், ஹோம ஹவிஸ் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டு, நீ உன்னுடைய அருளை அளிக்கிறாய். ஹே பக்தவத்ஸலனே. ஹே கருணைக்கடலே. 

***