Thursday, September 7, 2023

#256 - 756-757-758 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

756. ஸ்ரீ ஶூன்யாய நம:

வைகுண்டாதி33ளல்லிருவவனுஶூன்யனேநமோ

ஸுகி2ஶம்உத்தமத்வஉத்தம ஸ்வரூப

ஹாகே3ஸ்வாமியதே இதி ஶூன்யஎம்பு3வரு நீனு

ஸுக2மயனு ஸர்வோத்தமனு ஸர்வேஶனு ஸ்வாமி 

வைகுண்டம் போன்றதான இடங்களில் இருப்பவனே. ஷூன்யனே உனக்கு என் நமஸ்காரங்கள். ‘ஸம் என்று சுகமாக இருப்பவனே; ‘உ என்று உத்தமத்வத்தை கொண்டவனே; ஆகையால், உத்தம ஸ்வரூபனே. ‘ஸ்வாமியதே இதி ஷூன்ய என்று வாக்கினால் போற்றப்படுபவனே. சுகமயனாக இருக்கிறாய். ஸர்வோத்தமன். ஸர்வேஷன். நீயே ஸ்வாமி. 

757. ஸ்ரீ க்4ருதாஶிஷே நம:

ஸோம க்4ருதாதி33 இச்சா தோரிஸுவக்4ருதாஶி

நமோ எம்பெ3 ஜக3த் போஷண ரக்ஷண ஸர்வகர்த

ஸ்வாமி கிருஷ்ண நின்னவதார ஜக3தா3ப்யாயனவு

ப்ரேமானுக்3ரஹ நீடி3 கோ3பக்3ருஹ பால்பெ3ண்ணெகொண்டி3 

சந்திரன், சூரியன் ஆகியோரின் சக்தியை காட்டும் (அவர்களுக்கு சக்தியை கொடுக்கும்) க்ருதாஷியே உனக்கு என் நமஸ்காரங்கள். உலகத்தை காப்பவனே. அனைத்து செயல்களையும் செய்பவனே. ஸ்வாமியே. கிருஷ்ண என்னும் அவதாரம் கொண்டவனே. உலகத்தைக் காப்பதற்காக வந்து, கோபர்களுக்கு பரமான்னுகிரகம் செய்து, அவர்களின் வீட்டில் பால், வெண்ணைகளை திருடினாய். 

758. ஸ்ரீ அசலாய நம:

நாஶவில்லத3 நீனுஅசலநமோ நினகெ3

நாஶரஹித அப்ராக்ருத 3லஞான ஆனந்த3

ஶாஶ்வத ஆதி3கு3ரு அனிர்விண்ண அவ்யயனு

தோ3ஷலேஶவு இல்லவு அபே4த்3 3லாதி3 கு3ணவான் 

அழிவில்லாதவன்  நீ. அசலனே உனக்கு என் நமஸ்காரங்கள். அழிவில்லாத அப்ராக்ருத பல, ஞான, ஆனந்தத்தைக் கொண்டவனே. நிரந்தரமானவனே. ஆதிகுருவே. யாராலும் வெல்லப்பட முடியாதவனே. மாற்றங்கள் இல்லாதவனே. தோஷங்கள் அற்றவனே. வெல்லப்பட முடியாத பலம் போன்ற குணங்களை கொண்டவனே. 

***

No comments:

Post a Comment