Tuesday, September 26, 2023

#269 - 795-796-797 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

795. ஸ்ரீ லோகஸாரங்கா3 நம:

ஞானி அத்4வர்ய 3த்த ஸோமரஸவன்னு  லாப43ந்தெ

நீனு ஸ்வீகரிஸுவிலோகஸாரங்க3னேநமஸ்தே

நீனு ஸர்வலோகதி3 ஶ்ரேஷ்ட பதா3ர்த்த23ளொளித்3து3

நின்னய விபூ4தியனு ப்ரகடிஸுவி ஸ்ரீவிஷ்ணோ 

ஞானிகள், அறிஞர்கள் அளிக்கும் ஸோமரஸத்தினை (ஹவிஸ்ஸினை) நீ மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வாய். லோகஸாரங்கனே உனக்கு என் நமஸ்காரங்கள். நீ அனைத்து உலகங்களிலும், சிறந்த பதார்த்தங்கள் அனைத்திலும் இருந்து, உன்னுடைய விபூதி ரூபத்தை வெளிப்படுத்துகிறாய். ஸ்ரீவிஷ்ணுவே. 

796. ஸ்ரீ ஸுதந்தவே  நம:

ஸர்வதா3 அபி4வ்ருத்34னாத3வனுஸுதந்தநமோ

ஸ்ரீவரனு நித்ய ப்ரவ்ருத்தனு நீ ஸௌந்த3ர்யஸார

அவிகாரியு பூர்ணனு ஆனந்தா3தி3 ஸ்வரூபனு

ஸர்வ ஆதா4ரனுஅக்ஷராம்ப3ராந்த த்4ருதே:’ ஸ்வாமி 

எப்போதும் வளர்ந்தவனாக இருப்பவனே (பிறப்பு, இறப்பு இல்லாதவனே). ஸுதந்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீவரனே. எப்போதும் அனைத்திலும் இருப்பவனே. நீ மிகவும் அழகானவன். மாற்றங்கள் இல்லாதவன். பூர்ணன். ஆனந்தாதி ஸ்வரூபன். அனைத்திற்கும் ஆதாரனே. எல்லையில்லா ஆடைகளை (திரௌபதிக்கு) வழங்கியவனே. ஸ்வாமியே. 

797. ஸ்ரீ தந்துவர்த்34னாய நம:

யக்3ஞக3ளிந்த3 அபி4வ்ருத்34தந்துவர்த்த4நமோ

யக்3 அத்4வர்யக3ளிந்த3 விஸ்தார ஸ்துதனாகி3ஹி

யக்3ஞபூஜ்ய நீ த்3ரௌபதி3கெ3 அக்ஷய வஸ்த்ரவனித்தெ

தோயஜாஸன ஶிவாதி3 வினுத ஜக3ன்னாத2னு 

யக்ஞங்களால் மகிழ்ந்து வரங்களை அளிப்பவனே. தந்துவர்த்தனனே உனக்கு என் நமஸ்காரங்கள். யக்ஞங்களில் பிராமணர்களால் மிகவும் விளக்கமாக வணங்கப்படுபவனே. யக்ஞத்தால் பூஜிக்கப்படுபவனே. நீ திரௌபதிக்கு அக்‌ஷய வஸ்திரத்தை அளித்தாய். பிரம்ம, ருத்ர, ஆகிய அனைவராலும் வணங்கப்படுபவனே. ஜகன்னாதனே. 

***

No comments:

Post a Comment