Monday, September 18, 2023

#267 - 789-790-791 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

789. ஸ்ரீ து3ர்லபா4 நம:

பா4ரி ஸ்ரம யத்னதி3ம் ப்ராப்தியோக்3து3ர்லப4நமோ

கு3ருமுக2தி3ந்து3பதே3 கொண்டு3 யோக்3 ஸாத4

ஹரிப்ரீதியாகி3 சரிஸெ ஹரி தன்னிச்செயிந்த3

காருண்ய பீ3ரி ஒலிது3 லப்4யனாகி3 தோருவனு 

மிகுந்த சிரம, முயற்சியால் அடையப்படுபவனே. துர்லபனே உனக்கு என் நமஸ்காரங்கள். குரு முகத்தினால் உபதேசம் கொண்டு, யோக்யதைக்கு தக்கதான ஸாதனைகளை ஹரிப்ரீதிக்காக செய்தால், ஸ்ரீஹரியானவன், தன் விருப்பத்திற்கேற்ப கருணையை அருளி, அந்த பக்தனுக்கு தரிசனம் அளிக்கிறான். 

790. ஸ்ரீ து3ர்க3மாய நம:

ஸம்பாதி3ஸலஸாத்4 வஸ்து ஒத3கி3ஸி கொடு3வி

ஸ்ரீபதிது3ர்க3மனேநமோ எம்பெ3 3ந்துமஶக்ய

ஸத்ப4க்தர்கெ3 ஸாத4 கு3ருப்ரஸாத3 ஸம்பத்திந்த3

த்வத்ப்ரஸாத3 அபரோக் ஞானத4 அன்யதா2 

நம்மால் சம்பாதிக்க முடியாத அஸாத்தியமான வஸ்துக்களை அருள்பவனே. ஸ்ரீபதியே. துர்கமனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஸத் பக்தர்களுக்கு ஸாதனமான குரு பிரஸாதம் என்னும் செல்வத்தினால், உன் பிரஸாதம் என்னும் அபரோக்‌ஷ ஞானம் கிடைக்கிறது. இல்லையென்றால் அது கிடைப்பதில்லை. 

791. ஸ்ரீ து3ர்கா3 நம:

இதரரிம் நிக்3ரஹிஸலு கஷ்டஸாத்4யனாகி3ருவ

ஶத்ருக3 ஸம்ஹாரார்த்த ஹொரடு3து3ர்க3நமோ

ஶத்ருக3ளிந்த3 தை3த்ய நாஷ மாடு3வி நீனு ஸாது4

4க்த, ஹிம்ஸகர்கெ3 து3க்க2வித்து, 4க்தரன்ன காய்தி3 

எவராலும் அழிக்க முடியாதவன். எதிரிகளை அழிப்பதற்காக புறப்படுபவன். துர்கனே உனக்கு என் நமஸ்காரங்கள். எதிரிகளை, தைத்யர்களை நீ அழிக்கிறாய். ஸாது, பக்தர்களுக்கு துன்பம் கொடுப்பவர்களுக்கு துக்கம் கொடுத்து, உன் பக்தர்களை நீ காக்கிறாய். 

***


No comments:

Post a Comment