[பத்யம் #24] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #24]
எல்லரொளகீ3 வித4த3 பா4வனெ
ஸல்லலாரத3ரிந்த3 ஸ்வோத்தம
ப3ல்லவர ப3ளி ஸாரு வித்3யாப்ராப்திகோ3ஸுக3தி3 |
மெல்லனவர வரப்ரஸாத3வ
கெ3ல்லு தி3விஜரிகு3ண்டு ஈ விதி4
ஸொல்லு ஸித்3த4வு மூலகு3ரு தானிருவ காலக்கு ||24
எல்லரொளகீ விதத பாவனெ - அனைவருக்குள்ளும் இப்படியான சிந்தனை; ஸல்லலாரதரிந்த - இருக்காது என்பதால்; வித்யாப்ராப்திகோ ஸுகதி - கல்வியைக் கற்க வேண்டும் என்னும் நோக்கத்திற்காக; ஸ்வோத்தம - நம்மைவிட சிறந்தவர்கள்; பல்லவர பளி ஸாரு - அறிந்தவர்களிடம் செல்; மெல்லனவர - மெதுவாக அவர்களின்; வரப்ரஸாதவ - அருளை / கருணையை; கெல்லு - வெல்வாயாக; மூலகுரு - ஸ்ரீமன் மத்வாசார்யர்; தானிருவ காலக்கு - அனைத்து காலங்களிலும் குருவாக இருக்கிறார்; ஸொல்லு ஸித்தவு - அவரின் வாக்கினை பின்பற்ற வேண்டும்; ஈ விதி - இந்த விதியானது; திவிஜரிகுண்டு - தேவதைகளும் பொருந்துகின்றது.
சென்ற பத்யத்தின் தொடர்ச்சியாக, குருவை அடைவதைப் பற்றியே இங்கும் சொல்கிறார் ஸ்ரீதாஸர்.
அப்படிப்பட்ட ஒரு குருவை தேடிப் பிடிக்க முடியவில்லையெனில் / கால தாமதம் ஏற்பட்டால், நம்மைவிட சிறந்தவர்களிடம் சென்று, அவர்களின் கருணையைப் பெற வேண்டும். இந்த விதியானது, நமக்கு மட்டும் இல்லை, தேவதைகளும்கூட உண்டு. அவர்களும், மூலகுருவான (ஸ்ரீவாயுதேவர்) ஸ்ரீமன் மத்வாசார்யரிடம் சென்று அவரிடம் பாடங்களைப் படிக்கின்றனர்.
பரிபரிய லீலெக3ளனீபரி சரிஸுதிரலானந்த3தீர்த்த2ரு
ப3ரனிக3ம ஸூத்ரேதிஹாஸக3ளரியலாத3ரதி3 |
நெரெதி3ருவ சிஷ்யர ஸமூஹக3ளரியுவந்த3தி3 போ4தி4ஸுத்திரெ
உரக3பதி ஸனகாதி3முனிக3ள ஸஹித கேளித3னு ||41
(மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ)
இப்படியாக விதம்விதமான லீலைகளை ஸ்ரீமதாசார்யர் செய்து வந்தார். வேத ஸூத்ர இதிகாசங்களை அறிவதற்காக, பக்தி மரியாதையுடன் நிறைந்திருக்கும் சிஷ்யர்களின் கூட்டம் அறியுமாறு, பாடம் எடுத்துக் கொண்டிருக்கையில், சேஷதேவர், ஸனகாதி முனிகளுடன் சேர்ந்து வந்து ஆசார்யரின் பாடம் கேட்டார்.
க்ருத்திவாஸனெ ஹிந்தெ3 நீ நா
ல்வத்து1 க1ல்ப ஸமீரனலி ஸி
ஷ்யத்வ வஹிஸகி2ளாக3 மார்த்தக3ளோதி3 ஜலதி4யொளு |
என்று, ஸ்ரீவாயுதேவரிடம் ஸ்ரீருத்ரதேவரும் பாடம் படித்ததை ஸ்ரீஜகன்னாததாசர் ஹரிகதாம்ருதஸாரத்தில் விளக்கியிருக்கிறார்.
இத்தகைய குருவினால் நமக்குக் கிடைக்கக்கூடிய லாபங்களைப் பற்றி அடுத்த பத்யத்தில் விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர்.
***