[பத்யம் #80] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #80]
ஈ பரிய சிந்தனெய மாடு3த
பாப புண்ய த்3வந்த்3வ கர்மகெ1
லேபனாக3தெ3 முக்2ய கர்தனு ஹரியு எந்த3ரிது |
லோபகெ3ய்ஸத3லர்ப்பிஸலு ஹரி
பாபகர்மத3 ப2லவனீயதெ3
ஸ்ரீபதியு ப்ரீதியனெ வ்ருத்3தி4ஸி தன்னனே தோர்ப்ப ||80
ஈ பரிய சிந்தனெய மாடுத - மேற்கூறிய வகையில் சிந்தனையை செய்தவாறு; பாப புண்ய த்வந்த்வ கர்மகெ - பாப புண்ய என்னும் இரு கர்மங்களுக்கும்; லேபனாகதெ - அடிமையாகாமல் ; முக்ய கர்தனு - அவற்றை செய்பவன்; ஹரியு எந்தரிது - ஸ்ரீஹரியே என்று அறிந்து; லோபகெய்ஸதெ - அவற்றை வீணடிக்காமல்; அர்ப்பிஸலு - ஸ்ரீஹரிக்கு அர்ப்பணம் செய்தால்; ஹரி - ஸ்ரீஹரியானவன்; பாபகர்மத - பாவ கர்மங்களின்; பலவனீயதெ - பலன்களைக் கொடுக்காமல்; ஸ்ரீபதியு ப்ரீதியனெ - ஸ்ரீஹரியின் மேலான அன்பினையே; வ்ருத்திஸி - வளர்த்து; தன்னனே தோர்ப்ப - கடைசியில் தன்னையே கொடுப்பான்.
தாம் வெறும் ஒரு கருவியே என்றும் அனைத்தையும் செய்பவன், செய்விப்பவன் ஸ்ரீஹரியே என்று அறிந்து அந்த செயல்களை செய்து, பின் அவற்றை ஸ்ரீஹரிக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிறார் ஸ்ரீதாஸர்.
மேற்கூறிய வகையில் சிந்தனையை செய்தவாறு, பாப புண்ய என்னும் இரு கர்மங்களுக்கும் அடிமையாகாமல், அவற்றை செய்பவன், ஸ்ரீஹரியே என்று அறிந்து, அவற்றை வீணடிக்காமல், ஸ்ரீஹரிக்கு அர்ப்பணம் செய்தால், ஸ்ரீஹரியானவன், பாவ கர்மங்களின் பலன்களைக் கொடுக்காமல், ஸ்ரீஹரியின் மேலான அன்பினையே வளர்த்து, கடைசியில் தன்னையே கொடுப்பான்.
ஹரிகதாம்ருதஸாரத்தில் பல இடங்களில் இதைப் பற்றி ஸ்ரீஜகன்னாததாஸர் கூறியிருந்தாலும், ஒரேயொரு பத்யத்தை உதாரணமாக பார்க்கலாம்.
ஹரியெ முக்2ய நியாமகனு எ
ந்த3ரிது3 புண்யாபுண்ய ஹருஷா
மருஷ லாபா4லாப4 ஸுக2துக்கா2தி3 த்3வந்த்3வக3ள |
நிருத அவனங்க்ரிகெ3 ஸமர்ப்பிஸு
நரக பூ4 ஸ்வர்க்கா3பவர்க3தி3
கரண நியாமகன ஸர்வத்ரத3லி நெனெவுதிரு ||(11-14)
ஸ்ரீஹரியே அனைத்து செயல்களையும் செய்விக்கிறான் என்று அறிந்து புண்ய பாவங்களை, ஸ்ரீபரமாத்மனுக்கு சமர்ப்பணம் செய்யவேண்டும். மகிழ்ச்சி, கோபம், லாபம், நஷ்டம், சுக, துக்கம், என அனைத்தையும், எது வந்தாலும், அவை அனைத்தும் பகவத் விருப்பமே என்று சிந்தித்து, பரமாத்மனுக்கு சமர்ப்பித்து, நரக, பூமி, ஸ்வர்க்க, முக்தி முதலான எந்த இடத்திற்கு நாம் சென்றாலும், நம் இந்திரிய நியாமகனான ஸ்ரீஹரியே அங்கும் இருந்து, அந்தந்த சுக துக்கங்களை கொடுக்கிறான் என்று அனைத்து இடங்களிலும் பரமாத்மனை சிந்திக்க வேண்டும்.
****