Friday, January 13, 2023

#74 - 204-205-206 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

204. ஸ்ரீ ஸர்வத்3ருதே நம:

ஸர்வகாலத3லு நீ ப்ரகாஶமான மஹிமாவான்

ஸர்வத்3ருக்நமோ எம்பெ3 ஸர்வத்ர ஸர்வவ்யாபி நீனு

ஸர்வம்பஶ்யதி ஆது33ரிந்த3 ஸர்வத்3ருக் எம்பு3வரு

ஸர்வதோமுக2னெந்து3 ப்ரஸித்34 நீ ஸ்ரீ நாரஸிம்ஹ 

அனைத்து காலங்களிலும் நீ ஒளிமயமான மகிமைகளை கொண்டவன். ‘ஸர்வத்ருக் உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து இடங்களிலும் வ்யாப்தனானவன் நீயே. அனைத்தையும் பார்க்கிறாய் ஆகையால் ‘ஸர்வத்ருக் என்பார்கள். அனைத்து திசைகளிலும் பார்ப்பவன் என்று புகழ் பெற்றிருக்கிறாய். ஸ்ரீ நரசிம்மனே. 

205. ஸ்ரீ ஸிம்ஹாய நம:

மேக4தாட3னரூப ஶாஸன மாடு3வியோஸிம்ஹ

பா3கி3 ஶிர நமோ எம்பெ3 ஶங்க்ருந்த3 பர்ஜன்ய ஸேவ்ய

நாக3ராஜன 3ர்வப3டி3தி3 கி3ரியெத்தி கிருஷ்ண

கோ3குலவ காய்த3 கோ3விந்த3 தே3 தே3 ஸிம்ஹ 

மேகத்தை மீறியதான ரூபத்தை எடுத்து அனைவரையும் ஆள்பவனே. ‘ஸிம்ஹனே. உனக்கு தலை வணங்கி நமஸ்காரம் செய்கிறேன். அபாரமான மழை பெய்தபோது, உன் மேல் குடை பிடித்து காத்த நாகராஜனை, பின்னர் அவனுடைய கர்வத்தை அடக்கினாய் (காளிந்தி). கோவர்த்தன மலையை தூக்கி கோகுலத்தை கிருஷ்ணனான காத்தாய். கோவிந்தனே. தேவதேவனே. ஸிம்ஹனே. 

206. ஸ்ரீ ஸந்தா4த்ரே நம:

ப்ருது2வீ த்3யு ஸந்தா4னமாள்பஸந்தா4நமோ நினகெ3

த்3யுப்4வாதி3 ஸர்வதா4ரக பரம ஆத்ம ஸர்வே

ஸர்வக்கு ஆதா4ரனாகி3த்3து3 ஜனபோஷண மாள்பி

தைத்தரீய ஸத்பா4ஷ்யனோள்பது3 யோக்3 கு3ருத்3வார 

பூமி, ஆயுள், வாரிசி ஆகியவற்றைக் கொடுப்பவனான ‘ஸந்தாதனே உனக்கு என் நமஸ்காரங்கள். தேவர்கள் முதலான அனைவருக்கும் ஆதாரமானவனே. பரமாத்மனே. ஸர்வேனே. அனைத்திற்கும் ஆதாரனாக இருந்து, மக்களை நீ காக்கிராய். ஒரு தக்க குருவின் மூலமாக தைத்திரிய ஸத்பாஷ்யத்தை படித்தால் உன்னை அறியலாம்.

***

No comments:

Post a Comment