Sunday, January 22, 2023

#82 - 231-232-233 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

231. ஸ்ரீ விஷ்வாத்மனே நம:

ஸர்வவனு தா3னமாள்பவிஷ்வாத்மாநமோ நினகெ3

விஶ்வ நியாமக விஶ்வவ்யாபகனு நீனே ஸ்வராட்

வாயுவந்தர்யாமியாகி3ருவ ஸ்வாமி ஸ்ரீபதி நீனு

ஶவாஹன நினகெ3 ஈஜக3த் ஆவாஸஸ்தா2 

அனைத்தையும் அருள்பவனே. ‘விஶ்வாத்மனே உனக்கு என் நமஸ்காரங்கள். விஶ்வ நாமகனே. அனைத்து இடங்களிலும் வியாபித்திருப்பவனே. அனைத்து உலகங்களையும் ஆள்பவனே. வாயுவின் அந்தர்யாமியாக இருக்கும் ஸ்வாமி நீயே. லட்சுமிதேவியின் பதி. சிறந்த வாகனங்களைக் கொண்டவனே. இந்த உலகமே உனக்கு இருப்பிடம் ஆகும். 

232. ஸ்ரீ ஸஹஸ்ராக்ஷாய நம:

3ஹு ஶத்ரு ஸேனெயன்னு க்ஷயமாடு3வவ நீனு

ஸஹஸ்ராக்நமோ ஸஹஸ்ஷீர்ஷ புருஷ ஸ்ரீ

ஸஹஸ்ர ஷப்3தி4 அஸங்க்யேய சக்ஷு ஸ்வந்த நீனு

மஹதா3தி3 விஶ்வஸ்த2 விஶ்வதோமுக2 விஶ்வா ஆத்மா 

அதிகமான எதிரிகளின் சேனைகளை நீ அழிக்கிறாய். ‘ஸஹஸ்ராக்‌ஷனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸஹஸ்ரஶீர்ஷா புருஷ: நீயே. ஸ்ரீனே. ஸஹஸ்ர என்றால் எண்ணிக்கையற்ற என்று பொருள். அவ்வளவு கண்களைக் கொண்டவன் நீயே. மஹத்திலும் மஹத் நீயே. உலகத்தையே முகமாகக் கொண்டவன். உலகத்தையே ஆத்மாவாகக் கொண்டவன் நீயே. 

233. ஸ்ரீ ஸஹஸ்ரபதே நம:

3ஹு ரீதியலி ப்ரஜெக3 பாலனெ மாடு3

ஸஹஸ்ரபாத்நமோ நினகெ3 புருஷ ஸர்வேஶ்வரா

ஸஹஸ்ரஶீர்ஷா ஸஹஸ்ராக் அஸங்க்யேய பாதா3த்ம

அஹமாத்மா கு3டா3கேஷ ஸர்வபூ4 மஹேஷ்வர: 

பற்பல விதங்களாக மக்களை காக்கிறாய். ‘ஸஹஸ்ரபாத் உனக்கு என் நமஸ்காரங்கள். புருஷனே. ஸர்வேஶ்வரனே. அனந்தமான தலைகளை, கண்களை, பாதங்களைக் கொண்டவனே. அஹமாத்மா குடாகேஷ ஸர்வபூத மஹேஷ்வர: - மகாபாரதம் (6-32-20).

***


No comments:

Post a Comment