Tuesday, January 17, 2023

#78 - 216-217-218 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

216. ஸ்ரீ தா4ம்னே நம:

ஸோமார்க்காதி3 க்3ரஹதே3வதெ பு3த்3தி4 ஹொளிஸுவி நீ

தா4நமோ தேஜோரூபவான் தா4 நாமா

ஸோம ஸூர்யாதி33 பு3த்3தி4 க்ரியா நின்னிந்த3லேவெ

தம்ம தம்ம ப்ரகாஶனாதி33ளன்னு மாடு3வரு 

சந்திரன், சூரியன் ஆகிய கிரகங்களில் இருந்து அவர்களுக்கு ஒளி கொடுப்பவனே ‘தாமனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஒளி பொருந்தியவனே. தாம என்று அழைக்கப்படுபவனே. அந்த சந்திரன், சூரியன் ஆகியோர்களின் புத்தி, செயல்கள் உன்னாலேயே நடக்கின்றன. உன்னாலேயே அவர்கள் மற்றவர்களுக்கு ஒளி கொடுக்கிறார்கள். 

217. ஸ்ரீ ஸத்யாய நம:

4க்தரிகெ3 உத்தமவாத3 போ43 ஒத3கி3ஸுவி

ஸத்யனேநமோ ஸதத 4க்தவத்ஸலனெ ஸ்ரீ

தத்தத்காலதி3 4க்தேஷ்டதா3 ஹிதகரனு நீ

ஸந்தத ப்ரியகர ஸாது4 பரிபால கருணி

பக்தர்களுக்கு மிகச்சிறந்ததான போகத்தை அருள்பவனே ‘ஸத்யனே எப்போதும் உன்னை வணங்குகிறேன். பக்தவத்ஸலனே. லட்சுமிதேவியின் தலைவனே. அந்தந்த (தக்க) காலங்களில் பக்தர்களின் இஷ்டங்களை நிறைவேற்றுபவனே. இதம் அளிப்பவனே. நீ எப்போதும் அனைவருக்கும் ப்ரியமானவனாக இருக்கிறாய். ஸஜ்ஜனர்களுக்கு அருள்பவனே. கருணைக் கடலே. 

218. ஸ்ரீ ஸத்யபராக்ரமாய நம:

ஸோமாதி3 ஸாது4 யக்ஞரதராத3வர க்3ருஹதி3

ரமாயுக் வாஸமாள்பிஸத்யபராக்ரமநமஸ்தே

பி3ரம்மவாய்வர்க்காதி3 ஸத்யர பராக்ரம நின்னிந்த3

வாமன த்ரிவிக்ரம ஸத்யசாரி 3லிகொ3லிதி3 

ஸோமயக்ஞ முதலான யக்ஞங்களை செய்பவர்களின் வீட்டில் ஸ்ரீலட்சுமிதேவி உடன் வசிக்கிறாயே. ‘ஸத்யபராக்ரமனே உன்னை வணங்குகிறேன். பிரம்ம, வாயு, சூரியன் ஆகியோரின் பராக்கிரமங்கள் (செயல்கள்) உன்னாலேயே நடக்கின்றன. வாமனனே. த்ரிவிக்ரமனே. உண்மையை பேசி பின்பற்றியவனான பலிச் சக்கரவர்த்திக்கு அருளியவனே.

***


No comments:

Post a Comment