Monday, January 30, 2023

#90 - 255-256-257 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

255. ஸ்ரீ விஶிஷ்டாய நம:

விஶேஷ ஸ்துத்யனாகி3விஶிஷ்டநமோ நினகெ3

பி3ஸஜ ஸம்ப4 ஆதி3கவி ஸ்தோத்ர மாடி33னு

ஶான ஷக்ர ஸ்வாயம்பு4 ப்ரஹ்லாத3 த்4ருவாதி33ள்

ப்ரசேதஸரு அமர நர கூடதி3ம் ஸ்துத்ய ஸ்ரீ 

விஶேஷமாக வணங்கப்படக் கூடியவனே. விஶிஷ்டனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஆதிகவியான பிரம்ம தேவன் உன்னை ஸ்தோத்திரம் செய்தான். ருத்ரர், இந்திரன், ஸ்வாயம்புவ, பிரகலதன், த்ருவ, தேவர்கள், ஜீவர்கள் என அனைவராலும் வணங்கப்படுபவனே. லட்சுமிதேவியின் தலைவனே. 

256. ஸ்ரீ ஶிஷ்டக்ருதே நம:

ஶத்ரு ஶாஸன மாள்பஶிஷ்டக்ருத்நமோ நினகெ3

4க்தரு மாடி33 ஸத்கர்மஶிஷ்டவ பூர்ணமாள்பி

4க்தப3லிராஜ யக்ஞபூர்த்தி மாடி3ஸித3 வடோ1

அந்து3 3க்ஷக்ருத யக்ஞ ஶிஷ்ட பூர்ண மாடி3ஸிதி3 

எதிரிகளை அழிப்பவனே. ஶிஷ்யர்களை காப்பவனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்கள் செய்யும் கர்மங்களின் பலன்களைக் கொடுப்பவனே. பக்தனான பலி சக்ரவர்த்தியின் யக்ஞத்தை பூர்த்தி செய்த வடு வாமனனே. அன்று தக்‌ஷன் செய்த யாகத்தையும் நீ பூர்ணம் ஆக்கினாய். 

257. ஸ்ரீ ஶுசயே நம:

நிர்து3ஷ்டக்3ஞான 4க்தியுக் ஸ்தோத்ரத3 விஷயஶுசி

ஆத3ரதி3 நமோ எம்பெ3 கமலஜ ஸம்ஸ்துதனெ

வேத3த்3ருஷ்டா ஆதி3மனு ப்ரஹ்லாத3 த்3ருவாதி33ளு

ருத்3ரப்ரசேதஸக3 போ4தி4ஸித்33 த்வத்பர ஸ்தோத்ர 

யதார்த்த ஞான, பக்தி, ஸ்தோத்திரங்களின் விஷயனே. ஶுசியே உனக்கு பக்தியுடன் நமஸ்காரங்களை செய்கிறேன். பிரம்மனால் வணங்கப்படுபவனே. வேதங்களால் அறியப்படுபவனே. ஆதி மனுவான ஸ்வாயம்புவ, பிரகலாத, த்ருவ, தேவர்கள் ஆகியோர் உன்னை புகழ்ந்தனர்.

***


No comments:

Post a Comment