Monday, January 23, 2023

#83 - 234-235-236 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

234. ஸ்ரீ ஆவர்த்தநாய நம:

ஶத்ருக3ளனு ஸோலிஸி விமுகராகி3 மாடி3ஸுவி

ஶத்ரு ஜய ஶீல நீனுஆவர்த்தனநமோ எம்பெ3

அத்ர தத்ர ஸர்வத்ர நீ வாஸிஸுவி ப்4ரமிஸுவி

ப்4ராமயன் ஸர்வபூ4தானிஎந்து3 43வானுவாச 

எதிரிகளை வென்று, அவர்களை தோல்வி அடையச் செய்பவனே. ‘ஆவர்த்தனனே உனக்கு என் நமஸ்காரங்கள். இங்கு, அங்கு என அனைத்து இடங்களிலும் நீ வசிக்கிறாய். அனைத்து இடங்களிலும் நீ சஞ்சரிக்கிறாய். ப்ராமயன் ஸர்வபூதானி (கீதை 18-61). அனைவருக்குள்ளும் நான் இருக்கிறேன். 

235. ஸ்ரீ நிவ்ருத்தாத்மனே நம:

எது3ரு நிந்தவராத3 ஶத்ருக3ளு அஞ்சி ஓடு3

வந்தெ3 மாடு3நிவ்ருத்தாத்மஸதா3 நமோ நினகெ3

பூ4 ஸர்வ ப்ரளயதி3 உத3ரதி3 ரக்ஷிஸி

யுக்தகாலதி3 புன: ஸ்ருஜிஸுவ ஸ்ருஷ்ட்யாதி3கர்த 

எதிரில் நிற்கக்கூடிய எதிரிகள் பயந்து ஓடுமாறு செய்யும் ‘நிவ்ருத்தாத்மனே உனக்கு என் நமஸ்காரங்கள். பிரளய காலத்தில் அனைத்து ஜீவர்களையும் உதரத்தில் வைத்து காத்து, தக்க காலத்தில் மறுபடி அவர்களை படைக்கும் ஸ்ருஷ்ட்யாதி கர்தனே. 

236. ஸ்ரீ ஸம்வ்ருதாய நம:

ஸம்பூர்ணப3ஶாலிஸம்வ்ருதனெநமோ நினகெ3

ஸம்பூர்ண ஞானானந்த3 வீர்யாதி3 கு3ணக3ணக3

ஸ்வரூப நீனு எந்தா33 ப்ரஸித்த ஞானிக3ம்ய

பாபிமூட4 தாமஸக3 கூட நீனு ஸம்வ்ருதனு 

முழுமையான வலிமையைக் கொண்டவனே. ஸம்வ்ருதனே - உனக்கு என் நமஸ்காரங்கள். முழுமையான ஞானானந்த வீர்ய ஆகிய குணங்களின் ஸ்வரூபன் நீ என்று ஆகமங்கள் உன்னை புகழ்கின்றன. ஞானிகளில் வசிக்கிறாய். பாவிகளை, தாமஸர்களுக்கு தக்க தண்டனைகளை கொடுப்பவனே.

***


No comments:

Post a Comment