Tuesday, April 4, 2023

#127 - 369-370-371 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

369. ஸ்ரீ ஸமிதிஞ்சயாய நம:

அன்னதா4ன்யாதி3 வாஜாதி3 போ4ஜ்யவஸ்து ஸம்ருத்34னு

அனக4ஸமிதிஞ்சயனேநமோ பூர்ணகாமனே

நின்ன 4க்தர க்லேஷ நாஶமாடு3வி ஶத்ருக3

நீனு ஜயிஸுவி ஸதா3 ஜயஜய ஜயஶீல 

அன்ன, தான்யம், செல்வம் ஆகியவற்றை அபாரமாக கொண்டிருப்பவனே. ஸமிதிஞ்சயனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பூர்ண காமனே. உன் பக்தர்களின் துக்கங்களை நீ அழிக்கிறாய். எதிரிகளை நீ வெல்கிறாய். எப்போதும் உனக்கே வெற்றி கிடைக்கிறது. 

370. ஸ்ரீ விக்ஷராய நம:

அவினாஶி அக4தூ3 விக3தக்ஷரவிக்ஷர

ஸர்வதா3 நமோ எம்பெ3 4க்தாபி4லாஷதா3தா

யாவ வித4 நாஶவு கொரதெயு பரிணாமாதி3யு

யாவ விகாரவு இல்லத3 3லபூர்ண லக்ஷ்மீ 

அழிவு இல்லாதவன், பக்தர்களின் துன்பங்களை தொலைப்பவன். விக்‌ஷரனே உனகு என் நமஸ்காரங்கள். பக்தர்கள் விரும்புவதை கொடுப்பவனே. எந்த விதமான அழிவும், குறைவும், வளர்ச்சியும் இல்லாத, மாற்றங்களே இல்லாத, பல பூர்ணனே, லட்சுமிதேவியின் தலைவனே. 

371. ஸ்ரீ ரோஹிதாய நம:

ரக்தவர்ணனெரோஹிதனெநமோ எம்பெ3 நினகெ3

அதிவிமல பத்மனாப4 லோஹித வர்ணனு

ப்ராக்ருதவிலக்ஷண ஸௌந்தர்யஸார ஸுரூபனு

வந்தே3வந்த்3 ஸங்கர்ஷண நாராயண லக்ஷ்மீபதே 

சிவப்பு நிறம் கொண்டவனே; ரோஹிதனே உனக்கு என் நமஸ்காரங்கள். மிகவும் அழகியவனே; பத்மனாபனே, சிவப்பு நிறத்தவனே, ப்ராக்ருதத்திலிருந்து வேறுபட்டவனே. மிகவும் அற்புத அழகான ரூபம் கொண்டவனே. ஸங்கர்ஷணனே. நாராயணனே. லட்சுமிபதியே.

***


No comments:

Post a Comment