Sunday, April 23, 2023

#146 - 425-426-427 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

425. ஸ்ரீ ஸுத3ர்ஷனாய நம:

உத்தம ஞானத3 யோக்3யாதி4காரிகெ3 ஈவவ நீனு

ஸுத3ர்ஶனநமோ ஸுஷ்டப்ரிய 4ர்ஶனனு நீனு

ஸுத3ர்ஶன ஶோப4 3ர்ஶன சக்ர அஸிதா4ரி

3த்த கபில நரஸிம்ஹ ஹயாஸ்ய வ்யாஸ ஸ்ரீ 

யோக்ய அதிகாரிகளுக்கு உத்தம ஞானத்தை அளிப்பவனே. ஸுதர்னனே. உனக்கு என் நமஸ்காரங்கள். மிகவும் விரும்பி தரிசனம் பெற வேண்டிய விஷயம் நீ. சுதர்சன சக்கரத்தை கொண்டவனே. தத்தனே. கபிலனே. நரசிம்மனே. ஹயவதனனே. வ்யாஸனே. லட்சுமிதேவியின் தலைவனே. 

426. ஸ்ரீ காலாய நம:

அப4க்தருக3 4 ஶ்வ மொத3லாகி3ருவ

ஸம்பத்து ச்சேதிஸுவவனுகாலநமோ நினகெ3

நீ 3ந்தி4ஸுவி ச்சேதி3ஸுவி து3ஷ்டர ஞான ஸம்பத்

நீ 4க்தரிகெ3 ஞான ஸுக2வன்னு ஈவி 3யதி3 

உன்னை வணங்காதவர்களை (எதிரிகளை) அவர்களின் குதிரை, ஆகிய அனைத்து செல்வங்களையும் அழிப்பவனே. காலனே. உனக்கு என் நமஸ்காரங்கள். துஷ்டர்களின் ஞான, செல்வங்களை நீ அழிக்கிறாய். பக்தர்களுக்கு ஞான, சுகங்களை அளிக்கிறாய். 

427. ஸ்ரீ பரமேஷ்டி2னே நம:

நின்ன 4க்தரு ஞானிக3 மனெக3ளல்லிருவி

ஞான 4க்தியுத 3த்4யாதி33ளன்னு ஸ்வீகரிஸெ

ஞான 4க்தர ஹ்ருத3யத3ல்லி தத் ஆகாரத3லி

நீனித்3து3 ஸ்வீகரிஸுவிபரமேஷ்டி2நமோ எம்பெ3 

உன்னுடைய பக்தர்களின் ஞானிகளின் வீடுகளில் நீ இருக்கிறாய். ஞான, பக்தி உடன் சமர்ப்பிக்கப்பட்ட பால் போன்ற நைவேத்தியங்களை ஏற்றுக் கொள்கிறாய். அத்தகைய ஞானத்தை கொண்டவர்களான பக்தர்களின் இதயத்தில், அந்த ஆகாரத்தில் நீ இருந்து, அதனை ஏற்றுக் கொள்கிறாய். பரமேஷ்டியே. உனக்கு என் நமஸ்காரங்கள்.

***


No comments:

Post a Comment