ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
404. ஸ்ரீ மார்க்கா3ய நம:
ப்ரதிபாத்3யனாகி3ருவி ஶோத்4யவேத3க3ளிம் ‘மார்க்க3’
ஸதா3 நமோ ஜ்யோதிர்மய ஸுத3ர்ஶன சக்ரதா4ரி
மோத3ப3ல சித்3ரூப ஸிம்ஹவத் முக2ப்ரகட
ஸாது4ப4க்தஜன பால தே3வரிஷி ஸுரஸ்துத்ய
அனைத்து வேதங்களால் நீ ப்ரதிபாத்யனாக இருக்கிறாய்.
ஜோதிர்மயனே. மார்க்கனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸுதர்சன சக்ரத்தை தரித்தவனே. சித்
ரூபனே. ஸிம்மத்தைப் போன்ற முகத்தைக் கொண்டு, உன் பக்தர்களை காப்பவனே. தேவர்கள், ரிஷிகள்
என அனைவராலும் புகழப்படுபவனே.
405. ஸ்ரீ நீயாய நம:
ஸாது4ப4க்த ஜனருக3ளிம் ப்ராப்தனாகு3வ ‘நீனு’
ஸதா3 நமோ தே3வரிஷி மனுஷோத்தமாதி3 வந்த்3ய
முக்தி யோக்3ய ஸஜனர ஸமூஹக்கெ ஸாது4க்3ஞான
போ4தி4ஸி கைவல்யபத3 தோர்வ ஸ்ரீவாஸாதி3ரூப
உன் பக்தர்களால் நீ அடையப்படுகிறாய். தேவர்கள், ரிஷிகள்,
மனுஷ்யோத்தமர்களால் நீ எப்போதும் வணங்கப்படுகிறாய். முக்தி யோக்யமான ஸஜ்ஜனர்களின் சமூகங்களுக்கு
நீ யதார்த்தமான ஞானத்தை போதித்து, முக்திக்கான
மார்க்கத்தை காட்டுகிறாய். லட்சுமிதேவி வசிக்கும் ரூபத்தைக் கொண்டவனே.
406. ஸ்ரீ நயாய நம:
த்3ரவ்யத4ன ப்ராப்திமாள்ப ஔதா3ர்ய கு3ண நிதி4யே
‘நய’ நமோ வித்த ஞானப4க்தி ஆயுராரோக்3யதா3
த்3ரவ்யத4ன மதா3ந்த4னாக3தெ3 என்னிம் ஸத்ஸாத4ன
த3யதி3 மாடி3ஸி ப்ரீதனாகோ3 வாய்வந்தஸ்த2 ஸ்ரீஶ
த்ரவிய, தனங்களை பக்தர்களுக்கு அருளும் கருணை உள்ளம்
கொண்டவனே. நயனே. உனக்கு என் நமஸ்காரங்கள். நீ எனக்கு அருளும், ஞான, பக்தி, ஆயுள், ஆரோக்ய,
த்ரவ்ய, தன ஆகியவற்றால் மதம் கொள்ளாமல், என் மூலமாக ஸத் ஸாதனங்களை செய்வித்து அருள்வாயாக.
அதன் மூலம் நீ மகிழ்வாயாக. பாரதி ரமண முக்யபிராணாந்தர்கதனே. லட்சுமிதேவியின் தலைவனே.
***
No comments:
Post a Comment