Monday, April 24, 2023

#147 - 428-429-430 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

 428. ஸ்ரீ பரிக்3ரஹாய நம:

நின்ன 4க்தருக3ளன்னு மாத்ர நீ ஸ்வீகரிஸுவி

4 3யாளுவேபரிக்3ரஹனேநமோ நினகெ3

நின்ன ஸ்வாமித்வாதி3 மஹாத்ம்ய அரிது நிரந்தர

மன முட்டி 4ஜிஸுவவரிகெ3 மாத்ர காணுவி 

உன் பக்தர்களை மட்டும் நீ அருள்கிறாய். அபாரமான தயாளுவே. பரிக்ரஹனே உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னுடைய ஸர்வோத்தமத்வத்தை அறிந்து மகிமைகளை அறிந்து நிரந்தரமாக உன்னை வணங்குபவர்களை மட்டும் நீ பார்க்கிறாய். 

429. ஸ்ரீ உக்3ராய நம:

4க்தர ஸுவாக்யக3 ஸ்தோத்ரக3 மேலனகெ

ஸுஸ்தா2 ரூபனாகி3உக்3நமோ நமோ எம்பெ3

4க்தரலி உச்சராகி3 பி3ரம்ம ஈஷானாத்3யர்கெ3

முத3வீவி உக்3 நமோ உத்தமானந்த3மயனே 

பக்தர்களின் பிரார்த்தனைகளின், ஸ்தோத்திரங்களின் ரூபமாக இருப்பவனே உக்ரனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களில் சிறந்தவர்களான பிரம்ம, ருத்ரர்களுக்கு நீ மகிழ்ச்சியை கொடுக்கிறாய். உக்ரனே. மிகச் சிறந்த ஆனந்தத்தைக் கொண்டவனே. 

430. ஸ்ரீ ஸம்வத்ஸராய நம:

ப்ரீதியோக்3யஸுதனந்தெ ப்ரீதி பாத்ர 4க்தரிகெ3

நதி3 ஸிந்து4 ஸம்யோஜனத3ந்தெ ஸுக2காரி நீனு

ஆது33ரிம்ஸம்வத்ஸரஎந்தெ3னிபி நமோ எம்பெ3

வேதா3தி3ப்ராப்ய ஸுக2தா3 கால ஸம்வத்ஸர நியந்தா 

அன்பிற்கு பாத்திரரான மகனைப் போல, உன் பக்தர்களுக்கு கங்கையைப் போல அபாரமான சுகத்தை கொடுப்பவன் நீ. ஆகையால் ‘ஸம்வத்ஸர எனப்படுகிறாய். உனக்கு என் நமஸ்காரங்கள். வேதாதிகளால் அறியப்படுபவனே. காலனே. ஸம்வத்ஸரங்களை நியமிப்பவனே.

***

No comments:

Post a Comment