ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
431. ஸ்ரீ த3க்ஷாய நம:
உத்தமத்3ருட4வாத3 ஶர ருஜீகாத3ந்திருவ
அதித்3ருட4னு நீ ‘த3க்ஷனெந்தெ3னிபி’ நமோ எம்பெ3
அதிபராக்ரமி நீனு க்ஷோணியலி த3ஸ்யுக3ள
வதெ4 மாள்பி ஶீக்4ரதி3 ஜனார்த்3த4ன து3ர்கே3ஶ கல்கி
உத்தமமான, திடமான இருப்பவன் நீ. தக்ஷனே. உனக்கு என்
நமஸ்காரங்கள். நீ மிகவும் பராக்ரமி. நொடிப்பொழுதில் எதிரிகளை நீ சீக்கிரமாக அழிக்கிறாய். ஜனார்த்தனனே. துர்க்கையின் தலைவனே. கல்கியே.
432. ஸ்ரீ விஶ்ராமாய நம:
ப3லஶாலி ஶத்ருக3ள ஹிம்ஸக ‘விஶ்ராம’ நமோ
எல்லோனு எந்தி3கு3 லேஶவு ஶ்ரம நினகெ3 இல்ல
ஶீ3ல ப4க்தரிகெ3 ஶ்ரம பா3ரதெ3 மாடு3வி நீனு
கலுஷ ஶைவக3ள பா3தெ4 களெவி ஸுக்ஞானவீவி
வலிமையான எதிரிகளை அழிப்பவனே. விஶ்ராமனே உனக்கு என் நமஸ்காரங்கள். உனக்கு எப்போதும்
எப்படியும் சிரமம் என்பதே இல்லை. உன்னுடைய பக்தர்களுக்கு என்றும் சிரமமே வராமல் நீ
செய்விக்கிறாய். அனைத்து கஷ்டங்களையும், துக்கங்களையும் நீ பரிகரிக்கிறாய். உண்மையான
ஞானத்தை அருள்கிறாய்.
433. ஸ்ரீ விஶ்வத3க்ஷிணாய நம:
தே3வாதி3க3ளல்லி ஸ்வேச்செயிந்த3 ப்ரகடனாகு3வி
‘விஶ்வத3க்ஷிண’ நமோ ஜக3த்ஸ்ருஷ்ட்யாதி3 ஸர்வத3லி
தே3வ நீ ஸமர்த்த2 நினகெ3 ஸமரு அதி4கரு
யாவ கால தே3ஶத3ல்லு இல்ல ஸ்ரீபதி ஸர்வேஶ
தேவர்களில் நீ உன் இஷ்டப்படியே வெளிப்படுகிறாய். விஶ்வ தக்ஷிணனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஜகத் ஸ்ருஷ்ட்யாதி
அனைத்து செயல்களிலும் நீயே ஸமர்த்தன். தேவனே. உனக்கு சமமானவர்கள், அதிகமானவர்கள் என
எந்த காலத்திலும், எந்த தேசத்திலும் யாரும் இல்லை. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. சர்வேஶனே.
***
No comments:
Post a Comment