Tuesday, April 18, 2023

#141 - 410-411-412 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

410. ஸ்ரீ 4ர்மாய நம:

4 ரத்னாதி33ளன்னு யஜமானனல்லி இட்டு

நீனு ஒத3கு3வி4ர்மனேநமோ எம்பெ3 நினகெ3

நீனேவெ ஸர்வதா4ரகனாகி3ருவுத3ரிம் 4ர்ம

நெந்தெ3னிபி மனன தா4ரண ஶீலக3 ஒலிவி 

செல்வம், ரத்னம் ஆகியவற்றை உன் பக்தர்களுக்கு அருளி நீ அருள்கிறாய். தர்மனே. உனக்கு என் நமஸ்காரங்கள். நீயே ஸர்வ ஆதாரகனாக இருக்கிறாய். ஆகையால் தர்ம எனப்படுகிறாய். நினைவுத் திறனை, புகழினை நீ அருள்கிறாய். 

411. ஸ்ரீ 4ர்மவிவே நம:

3ஹுப3ஹு அபீ4ஷ்டவ ஒத3கி3ஸுவி 4ர்மவித்

அஹர்னிஶி நமோ நினகெ3 உதா3 ஸ்ரீநிதி4யே

மஹார்ஹ நீ ஸர்வவேத3 4ர்மபூர்ண திளித3

மஹாப4க்த 4ர்மசாரிகொ3லிது3 4ர்ஶனவீவி 

பற்பல அபீஷ்டங்களை உன் பக்தர்களுக்கு எப்போதும் அருள்பவனே, தர்மவித் - உனக்கு என் நமஸ்காரங்கள். கருணாபூர்ணமான ஸ்ரீநிதியே. சிறந்தவனே. அனைத்து வேதங்களையும், தர்மங்களையும் முழுமையாக அறிந்தவனே. உன்னுடைய சிறந்த பக்தனுக்கு, தர்மங்களை சரியாக பின்பற்றுபவனுக்கு நீ தரிசனம் அளிப்பாய். 

412. ஸ்ரீ உத்தமாய நம:

உத்க்ருஷ்டதமனாத்34ரிந்த3உத்தமனுஎந்தெ3னிபி

முகி3து3 கர நமோ எம்பெ3 ஸ்ரீகர நாராயண

ஶக்ராதி3கு3த்தமனு ஶிவ ஶிவகு3த்தம வாயு

வாயுகு3த்தம ஸ்ரீ ஸ்ரீபதிகெ3 உத்தமரு இல்ல 

அனைத்திலும் சிறந்தவன் ஆகையால், உத்தமன் என்று அழைக்கப்படுகிறாய். கைகளை வணங்கி உன்னை நமஸ்காரம் செய்கிறேன். ஸ்ரீகர நாராயணனே. இந்திரனுக்கு உத்தமன் சிவன். சிவனுக்கு உத்தமன் வாயு. வாயுவிற்கு உத்தமள் ஸ்ரீ. ஆனால், ஸ்ரீபதியைவிட உத்தமர் என்று யாரும் இல்லை.

***

No comments:

Post a Comment