Friday, April 21, 2023

#144 - 419-420-421 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

419. ஸ்ரீ ஹிரண்யக3ர்ப்பா4 நம:

ஹிதரூப மொத3லாத3 விஷயக3 க்3ரஹிப

நேத்ராதீ3ந்த்3ரியதா3ஹிரண்யக3ர்ப்ப4னேநமோ எம்பெ3

ஜாதரூபாத்மகவு பி3ரம்மாண்டக3ர்ப4னு நீனு

ஹிதகர ஸுரமணீய ஸௌந்தர்யஸார சார்வாங்க3 

அனைத்து நல்ல விஷயங்களையும் கிரகிக்கும் கண் முதலான இந்திரியங்களின் தந்தையே ஹிரண்யகர்ப்பனே உனக்கு என் நமஸ்காரங்கள். இந்த பிரம்மாண்டத்தை உன் கர்ப்பத்தில் (உதரத்தில்) வைத்திருப்பவன் நீ. அனைவருக்கும் நலன்களை கொடுப்பவனே. அழகான உருவம் கொண்டவனே. 

420. ஸ்ரீ ஶத்ருக்4னாய நம:

ஶ்ரேயஸ்ஸாத3னவாகி3 உபயோக3 மாட3லு அர்ஹ

த்3ரவ்யாதி33ளொத3கி3ஸுவஶத்ருக்4நமோ எம்பெ3

தோயஜாக் ஶத்ருக்4 தா3ரித்3ராதி3 நாஶகனெ

காயீந்த்3ரிய தோ3 பரிஹரிஸி ஸாத4னகெ3யிஸோ 

பயன்படுத்த தகுதியான சிறந்ததான திரவியங்களை அருள்பவனே. த்ருக்னனே உனக்கு என் நமஸ்காரங்கள். சூரிய கிரணங்களைப் போல கஷ்டங்களை பரிகரிப்பவனே. தேகத்தின் தோஷங்களை பரிகாரம் செய்து, ஸாதனைகளை செய்விப்பாயாக. 

421. ஸ்ரீ வ்யாப்தாய நம:

வ்யாப்தனாகி3ருவி ஜக3த்3ரக்ஷணெ மாட3லிகெ நீ

வ்யாப்தனெம்ப3நாமதி3 கரெஸிகொம்பி3 விஷ்ணோ நமோ

வ்யாப்தனாகி3ருவி ஜக3த்3தா4ரண மாட3லிக்காகி3

ஆப்தகாம நிரபேக் நிர்லிப்த அவிகாரனு 

உலகினை காப்பவனே. அனைத்து இடங்களிலும் நீ வ்யாப்தனாக இருக்கிறாய். வ்யாப்தன் என்று அழைக்கப்படுகிறாய். விஷ்ணுவே உனக்கு என் நமஸ்காரங்கள். உலகை காப்பதற்காக நீ இருக்கிறாய். எதையும் எதிர்பார்க்காதவன். விலகியிருப்பவன். எவ்வித தேக மாற்றங்களும் இல்லாதவன். 

***


No comments:

Post a Comment