Friday, April 14, 2023

#137 - 399-400 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

 399. ஸ்ரீ புஷ்டாய நம:

3லாதி33ளிந்த3 பூர்ணஸ்வரூப நீபுஷ்டநமோ

3லானந்தா3தி33ள் புஷ்டி ஸர்வாவதாரதி3 ஸமா

ஜ்வலிஸுதி ஸூர்யமண்ட3 மத்4யெ ஸ்ரீ நாராயண

3லமூர்த்தி வாயு ஸரஸ்வதியிந்த3 ஸம்ஸ்துத்யனு 

பலம் (வலிமை) ஆகியவற்றை பூர்ண ஸ்வரூபனாக இருப்பவனே. புஷ்டனே உனக்கு என் நமஸ்காரங்கள். பல, ஆனந்த ஆகியவற்றை முழுமையாகக் கொண்டவனே. அனைத்து அவதாரங்களிலும் சமமானவனே. சூர்ய மண்டலத்தின் நடுவில் இருந்து ஜொலிப்பவனே. ஸ்ரீ நாராயணனே. பிரம்மா, வாயு, சரஸ்வதி என அனைவராலும் வணங்கப்படுபவனே. 

400. ஸ்ரீ ஶுபே4க்ஷணாய நம:

தே3வாதி33ளல்லியு ப்ரதிஹதவாக33 ஆக்ஞெ

யாவாக3லுவுள்ளஶுபே4க்ஷணநமோ நமோ எம்பெ3

ஐஷ்வர்யஶீல கமலாயதேக்ஷண ஸுஶுப4தா3

ஸர்வஸௌபா4க்3 ஆயுராரோக்3 4க்த்யாதி33ளீவி 

அனைத்து தேவர்களிலும்கூட விட்டுவிடாமல் நீ இருந்து, அவர்களுக்கு ஆணையிடுகிறாய். ுபேக்‌ஷணனே உனக்கு என் நமஸ்காரங்கள். அபாரமான செல்வ சம்பத்தினை கொண்டிருப்பவனே. தாமரைக் கண்ணனே. அனைத்து நலன்களையும் அருள்பவனே. அனைத்து சௌபாக்கியங்களையும், ஆயுள், ஆரோக்யம் ஆகியவற்றை உன் பக்தர்களுக்கு நீ அருள்கிறாய்.

***

No comments:

Post a Comment