Tuesday, October 3, 2023

#276 - 816-817-818 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

816. ஸ்ரீ மஹாக3ர்தாய நம:

தை3த்யக்ருத ஆவரணனாஷ மாள்பமஹாக3ர்தா

ஸதா3 நமோ நரகாஸுர ஹந்தா கிருஷ்ண மது4ஹந்தா

ஹ்ருத3யஸத்3 கு3ஹாந்தஸ்த2 மஹான் ஆகா நாம

ஹ்ருத்திமிர பா4ஸ்கர ஸர்வமுக்தா முக்தாஶ்ரயனு

தைத்யர்களால் செய்யப்படும் வேலிகளை / உறைகளை அழிப்பவனே. மஹாகர்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். நரகாசுரனை கொன்றவனே. கிருஷ்ணனே. மது என்னும் அசுரனை கொன்றவனே. ஹ்ருதயத்தில் இருக்கும் குகைக்குள் இருப்பவனே. ஆகாஷ நாமகனே. இருட்டினை விலக்கும் சூரியனே. அனைத்து முக்தர்களின் ஆஸ்ரயனே. 

817. ஸ்ரீ மஹாபூ4தாய நம:

அபீ4ஷ்டப்ரத3 ஆனந்த3ரூபமஹாபூ4 நமோ

பஞ்சபூ4 ஆகாஶாதி33 நியாமக கர்த

ஸம்பூ4தனு மஹாசதுர்முக2 நின்னிம் ஸர்வஜக3த்

உத்பாத3 நீனு ப்ராணிக3 மஹாஸ்வாமி  

அனைத்து அபீஷ்டங்களையும் அருள்பவனே. ஆனந்தரூபனே. மஹாபூதனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பஞ்சபூத ஆகாஷங்களின் நியாமகனே. அவற்றை படைத்தவனே. அவற்றில் இருப்பவனே. பிரம்மதேவன் உன் மூலமாகவே அனைத்து உலகத்தையும் படைத்தார். நீயே அனைத்து பிராணிகளின் தலைவனாக இருக்கிறாய். ஈஷனே. 

818. ஸ்ரீ மஹா நித4யே நம:

மஹாப4க்தர போஷிஸி பாலிஸுவிமஹாநிதி4

அஹர்னிஶி நமோ நினகெ3 மஹைஶ்வர்ய ஸ்வரூப

மஹா நிதி4யே ஸ்ரீய:பதயே நின்ன ப்ராப்த ஸூரிக3ளு

மஹாப4க்தரிகெ3 நீ போஷக ரக்ஷக தோஷகரனு 

உன் பக்தர்களை பாதுகாத்து, காக்கிறாய். மஹாநிதியே. உனக்கு என் நமஸ்காரங்கள். மஹா ஐஸ்வர்ய ஸ்வரூபத்தை கொண்டவனே. மஹா நிதியே. ஸ்ரீலட்சுமிதேவியின் பதியே. தேவர்கள், பக்தர்களுக்கு நீயே காப்பவன். வழி நடத்துபவன், அனைத்தையும் செய்விப்பவன். 

***


No comments:

Post a Comment