ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
810. ஸ்ரீ ஜயந்தாய நம:
ஜயவான் ‘ஜயந்த’ நமோ ஜய ப3லானந்த3ஞான
ஹயவத3ன மீன கூர்ம கோல நரஸிம்ஹ வடு
க்ஷத்ரியஹர பு3த்3த4 கல்கி ராம கிருஷ்ணவ்யாஸ
ஜயவான் ஸதா3 நீனு ஜயத்யமித பௌருஷ:
வெற்றியாளனே. ஜயந்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். பல, ஆனந்த, ஞான பூர்ணனே. ஹயவதனனே. மீன, கூர்ம, வராக, நரசிம்ம, வாமனனே, பார்க்கவனே, ராம, கிருஷ்ண, புத்த, கல்கியே. நீயே எப்போதும் வெற்றியாளனாக இருக்கிறாய். அபாரமான பௌருஷேயத்வத்தை கொண்டவனே.
811. ஸ்ரீ ஸர்வவிஜ்ஜயினே நம:
ஸர்வவஶ ஸ்வாமித்வ கொடு3வந்த2 அனுக்3ரஹவ
ஸ்ரீவரனே நீ மாள்பி ‘ஸர்வவிஜ்ஜயி’ நமோ எம்பெ3
ஸர்வவனு அரிதவனு ஸர்வவித் நீ
ஸர்வஜய ப்ராப்தி உள்ள ஸர்வவிஜ்ஜயீ ஸ்ரீபதே
உன்னைப் பற்றியதான பக்தியை கொடுக்க நீயே அருள்கிறாய். ஸ்ரீவரனே. ஸர்வவிஜ்ஜயினே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்தையும் அறிந்தவன் நீ. அனைத்து இடங்களிலும் வெற்றியை கொண்டவனே. ஸ்ரீபதியே.
812. ஸ்ரீ ஸுவர்ணபி3ந்த3வே நம:
வேத3வாக்யக3ளிந்த3 லப்4யவாகு3வ ‘ஸுவர்ணபி3ந்து3’
ஸதா3 நமோ நினகெ3 ஸதா3க3மதி3ம் ஞான நீனு
‘வேதை3ஶ்ச ஸவைரஹமேவ வேத்3ய’ எந்து3 க்ருஷ்ணோக்தி
‘ஶாஸ்த்ர யோனித்வாத் தத்து ஸமன்வயாத்’ எந்3து3 ஸூத்ரக3ள்
வேத வாக்கியங்களால் கிடைப்பவனே. ஸுவர்ணபிந்துவே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து ஆகமங்களால் அறியப்படுகிறாய். ‘வேதைஸ்ச ஸவைரஹமேவ வேத்ய:’ என்று கிருஷ்ணனே கூறியிருக்கிறான். ‘ஓம் சாஸ்திர யோனித்வாத் ஓம், ஓம் தத்து ஸமன்வயாத் ஓம்’ என்று ஸூத்ரங்கள் சொல்கின்றன.
***
No comments:
Post a Comment