Wednesday, October 25, 2023

#295 - 870-871-872 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

870. ஸ்ரீ ஸர்வஸஹோனியந்த்ரே நம:

ஸர்வ ஓஜஸ் நியாமகனு ஸர்வேந்தி3ரிய ஶக்திய

ஸர்வ நியமன மாடு3தி நீஸர்வஸஹோனியந்தா

ஸர்வதா3 நமோ நினகெ3 தே3வரிஷி நரஶ்ரேஷ்ட

ஸர்வாதா4 நியந்த்ருவாகி3 இருவி நீ ஸர்வஸ்வாமி 

அனைத்து சக்திகளின் நியாமகனே. அனைத்து இந்திரியங்களின் சக்திகளையும் நியமனம் செய்விப்பவன் நீயே. ஸர்வஸஹோனியந்த்ரே உனக்கு என் நமஸ்காரங்கள். தேவரிஷியிலிருந்து நரஸ்ரேஷ்டர் வரையில் என அனைவருக்கும் ஆதாரமானவனே. அனைவரின் நியாமகனாக நீயே இருக்கிறாய். ஸர்வஸ்வாமியே. 

871. ஸ்ரீ நியமாய நம:

ஸர்வஜீவ நியாமகனுநியம நமோ எம்பெ3

ஸர்வஜீவரு ஶிதவ்யரு நீனேவெ ஶனு

அவரவர ஸ்வரூப யோக்3யதா ஸ்வபா4வகர்ம

இவு அரிது த்ரிகரண ஸாத4 நியமிபி 

அனைத்து ஜீவர்களையும் நியமிப்பவனே. நியமனே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து ஜீவர்களைவிட உத்தமன் நீயே. ஈஸனே. அவரவர்களின் ஸ்வரூப யோக்யதையை, ஸ்வபாவ கர்மங்களை அறிந்து, அவர்களின் த்ரிகரணங்களால் ஸாதனைகளை செய்விப்பவனே. 

872. ஸ்ரீ யமாய நம:

ப்ராப்ய ஶ்வர்ய நிர்மிஸி ஒத3கு3யம நமோ

தப்பதெ3 த்ரிகரணதி3ம் ஸாத4 மாள்பஜீவரிகெ3

ப்ராப்ய ஸுக2ஞானாதி3 ஶ்வர்ய நிர்மிஸி ஸாத4

2லவாகி3 கொடு3வி நீ க்4ருணீ வைஷம்யரஹித 

அனைத்து ஐஸ்வர்யங்களையும் நிர்மாணம் செய்து, அருள்பவனே. யமனே உனக்கு என் நமஸ்காரங்கள். தங்களின் த்ரிகரணங்களால் தவறாமல் ஸாதனைகளை செய்யும் ஜீவர்களுக்கு, அந்த ஸாதனைகளின் பலனாக - ஸுக, ஞான, ஐஸ்வர்யாதிகளை அருள்பவனே. ஒளிர்பவனே. பாரபட்சம் அற்றவனே. 

****


No comments:

Post a Comment