ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
840. ஸ்ரீ ஸப்தவாஹனாய நம:
‘ஸப்தவாஹன’ நீ ப3ஹ்வன்ன ப்ராப்தி மாடு3வி நமோ
ஸப்தாஷ்வ ஸூர்ய நியாமகனு ஸ்ரீமன் நாராயண
ஸப்த சந்தஸ்க வைதீ3க மந்த்ரக3ளயுக் ஸூர்யாந்தஸ்த2
ஸப்தத்வக் மொத3லாத3 தா4து ஸப்த ப்ராணாந்தஸ்த2னு
ஸப்தவாகனனே. நீ அபாரமான பல சுகங்களை பக்தர்களுக்கு அளிக்கிறாய். ஏழு குதிரைகளை பூட்டிய தேர் கொண்ட சூரியனை நீ நியமனம் செய்கிறாய். ஸ்ரீமன் நாராயணனே. ஸப்த சந்தஸ் கொண்ட வைதீக மந்திரங்களால் புகழப்படுபவனே. சூரியனில் அந்தர்யாமியாக இருப்பவனே. ஏழு தாதுகளால் ஆன தேகத்தில் இருப்பவனே. ஸப்த ப்ராணர்களில் இருப்பவனே.
841. ஸ்ரீ அமூர்த்தயே நம:
யுத்3த4தி3 கீர்த்யாதி3கள கொடு3வுத3கெ ஶக்தி உள்ள
மாத4வ ‘அமூர்த்தியே’ நமோ நமோ எம்பெ3 நினகெ3
அஸ்தூ2ல அப்ராக்ருதவு நின்னதே3ஹ நீ அவ்யக்த
ஶ்ருதி ‘அரூபம் அக்ஷரம் பி3ரம்ம ஸத்3யாsவ்யக்தம்’ எந்து3
போரில் வெற்றியை கொடுப்பதற்கு சக்தி உள்ள மாதவனே அமூர்த்தயே உனக்கு என் நமஸ்காரங்கள். அஸ்தூல, அப்ராக்ருதமான தேகம் கொண்டவனே. ‘அரூபம் அக்ஷரம்’ என்று ஸ்ருதிகள் உன்னை புகழ்கின்றன.
842. ஸ்ரீ அனகா4ய நம:
ஸர்வ கார்யமாள்புத3கெ ஸமர்த்த2 இந்தி3ரியக3ள
ஸ்ரீவரனே நீ ப்ராப்தி மாடி3ஸுவி ‘அனக4’ நமோ
யாவ பாபவு நினகி3ல்ல பாபஶூன்ய அனக4
ஸர்வதோ3ஷ க3ந்த4தூ3ர ஞானானந்த3 ப3லரூப
அனைத்து செயல்களையும் செய்வதற்கு சமர்த்தனே. இந்திரியங்களுக்கு சக்தியை கொடுப்பவனே. அனகனே உனக்கு என் நமஸ்காரங்கள். எவ்வித பாவங்களும் உனக்கு இல்லை. எவ்வித தோஷங்களும் உனக்கு இல்லை. ஞானானந்த பல ரூபனே.
***
No comments:
Post a Comment