Monday, October 30, 2023

#299 - 882-883-884 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

882. ஸ்ரீ ஜ்யோதிஷே நம:

த்3யுதிஸ்வரூபனுஜ்யோதிர் நமோ நமோ எம்பெ3

ஜ்யோதி: ஶப்34தி3 வாச்ய நீனே இதரர்யாரு இல்ல

ஜ்யோதிஸ் சரணாபி4தா4னாத் எந்தி3ஹுது பி3ரம்மஸூத்ர

ஆதி3த்ய சந்த்ராதி33ளிகெ3 ப்ரகா நீ கொடு3வி 

த்யுதி ஸ்வரூபனே. ஜ்யோதிஷே உனக்கு என் நமஸ்காரங்கள். ஜ்யோதி என்னும் சொல்லினால் நீ அழைக்கப்படுகிறாய். வேறு யாரும் அப்படி அழைக்கப்படுவதில்லை. பிரம்மஸூத்ரம் உன்னையே ஜ்யோதிஸ் சரணாபிதானாத் என்று அழைக்கிறது. சூர்ய, சந்திரர்களுக்கு நீ ஒளியை கொடுக்கிறாய். 

883. ஸ்ரீ ஸுருசயே நம:

நிஷ்களங்க உத்தம ஸ்துதிவுள்ளஸுருசி நமோ

அகளங்க நின்னய மாஹாத்ம்யெ திளுவளிகெயிம்

நிஷ்குடில அவிச்சின்ன ப்ரேமவு ப்ரவஹிஸுவ

ஸத்கு3ணக3 கத2 ஸ்துதி விஷயனு நீனு 

களங்கமற்றவனே. உத்தம ஸ்துதிகளை கொண்டவனே. ஸுருசியே. உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னுடைய மகிமைகள் களங்கமற்றவை. இந்த மகிமைகளை அறிவதால், உன் மேல், குறைகள் அற்ற, நிரந்தரமான, அன்பு பெருக்கெடுக்கிறது. நற்குணங்களைக் கொண்டவனே. வேதங்களால் போற்றப்படும் விஷயன் நீயே. 

884. ஸ்ரீ ஹுதபு4ஜே நம:

4னபோ4க்தனு நீனுஹுதபு4க் நமோ நமோ எம்பெ3

நின்னய ஸ்வரூபபூ4 ஆனந்தா3தி3 கு3ணக3ளு

அனந்த ஶக்தியு 4க்தரு மாள்ப பூஜாவிலாஸ

ஆனந்த3 லீலெயிம் அனுப4விஸுவி ஸ்வரமண 

தன போக்தனே. ஹுதபுஜே உனக்கு என் நமஸ்காரங்கள். ஆனந்தாதி குணங்கள், உன்னுடைய ஸ்வரூப பூதமாக இருக்கின்றன. அனந்த சக்திகளை கொண்டவனே. பக்தர்கள் செய்யும் பூஜைகளை, உன்னுடைய ஆனந்த லீலைகளால் அனுபவிக்கிறாய். ஸ்வரமணனே. 

***


No comments:

Post a Comment