Wednesday, October 11, 2023

#281 - 831-832-833 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

831. ஸ்ரீ ஸித்3தா4 நம:

வேதா3தி3 ஶாஸ்திரதி3ந்த3 ஷிக்ஷண யோக்3யர ஒடெ3

ஸித்34நமோ எம்பெ3 அர்ஜுனகெ3 போ4தி3ஸித3 கிருஷ்ண

மாதெகெ3 உத்கிருஷ்ட வைதீ3 ஸாங்க்ய ஶாஸ்திர ஹேளிதி3

அந்தர்யாமி மமஸ்வாமிகிருஷ்ண கபில வ்யாஸ 

வேதாதி சாஸ்திரங்களால் உன்னை துதிக்கும், யோக்யர்களின் தலைவனே. ஸித்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். அர்ஜுனனுக்கு போதித்த கிருஷ்ணனின் தாய்க்கு, சிறந்ததான ஸாங்க்ய சாஸ்திரத்தை உபதேசம் செய்தாய். எனக்குள் அந்தர்யாமியாக இருப்பவனே. என் ஸ்வாமியே. கிருஷ்ணனே. கபிலனே. வ்யாஸனே. 

832. ஸ்ரீ ஶத்ருஜிதே நம:

ஶத்ருஜிதாஶத்ருஜித நமோ நமோ நமோ எம்பெ3

வேத3 கள்ள மது4கைடப4 ஆதி3தை3த்ய ஸுபா4ஹு

தை3த்யராஜ மாரீச ஶகட கேஶி பௌண்ட்ரகாதி3

ஶத்ருஜேதா என்ன ஒளஹொர ஶத்ரு நிக்3ரஹிஸோ 

எதிரிகளை அழிப்பவனே. ஷத்ருஜிதனே உனக்கு என் நமஸ்காரங்கள். வேதங்களை திருடியவர்களான மது, கைடப, ஆதி தைத்யனான ஹிரண்யாக்‌ஷ, ஸுபாஹு, மாரீசன், ஷகட, கேஷி, பௌண்ட்ரக வாசுதேவ ஆகிய அனைத்து எதிரிகளையும் வென்றவனே. எனக்குள் இருக்கும் எதிரிகளை அழிப்பாயாக. 

833. ஸ்ரீ ஶத்ருதாபனாய நம:

வ்ருத்ராதி3 தை3த்யர்கெ3 ஸர்வ ஶத்ருக3ளிகெ3 தாப ஈவி

ஶத்ருதாபனெ நமோ 4க்தஜனரனு ரக்ஷிஸி

உருக்ரமனே நமோ நின்னய தபன ஸாமர்த்2யதி3ந்த3

சோரர்க3ளு ஶத்ருக3ளு நிரோதி4ஸல்படு3வரு 

வ்ருத்ராசுர முதலான தைத்யர்களுக்கு, மற்றும் அனைத்து எதிரிகளுக்கும் தொந்தரவு கொடுக்கிறாய். ஷத்ருதாபனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களை காக்கிறாய். பெரிய அடிகளை வைத்தவனே (வாமனனே). உன்னுடைய அழிக்கும் சாமர்த்தியத்தினால் திருடர்கள், எதிரிகள் ஆகியோர் அழிக்கப்படுகின்றனர். 

***


No comments:

Post a Comment