Monday, July 31, 2023

#226 - 666-667-668 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

666. ஸ்ரீ காமபாலாய நம:

ஸர்வப4க்த இச்சித ஆயா மனஸ்ஸலி ரக்ஷிப

ஸ்ரீவரனெகாமபாலநமோ எம்பெ3 ஸர்வபால

தே3 நின்னய ப்ரஸார காமதி3 4ஜிபரன்ன

ஸர்வதா3 பாலிஸுவி ப்ரத்4யும்னன பித ஸ்ரீகிருஷ்ண 

பக்தர்கள் விரும்பும் விஷயங்களை அந்தந்த மனதில் கொடுத்து அவர்களை காக்கும் ஸ்ரீவரனே, காமபாலனே, உனக்கு என் நமஸ்காரங்கள். அனைவரையும் காக்கும் தேவனே. உன்னை அன்புடன் வணங்கும் பக்தர்களை எப்போதும் காக்கிறாய். ப்ரத்யும்னனின் பிதனே ஸ்ரீகிருஷ்ணனே. 

667. ஸ்ரீ காமினே நம:

ஸகல ஆயுத43ளன்னு அஸுரர கையிந்த3

அக3லிஸி நிவாரண மாள்பகாமிநமோ எம்பெ3

ஸகல ஜக3த்ரக்ஷண இச்செயுள்ளவ ஸ்வாமி நீ

4க்தர்க3 ஸாது4 இச்சாஸாத4 நின்ன அதீ4 

அனைத்து ஆயுதங்களையும் அசுரர்களின் கைகளிலிருந்து விலக்கி, ஸஜ்ஜனர்களுக்கு நிவாரணம் அளிக்கும் காமினே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து உலகைக்கும் காக்கும் விருப்பம் கொண்டவன் நீ. பக்தர்களின், ஸாதுக்களின் விருப்பத்திற்கு ஸாதனமான விஷயங்கள் உன்னுடைய அதீனமாகவே இருக்கின்றன. 

668. ஸ்ரீ காந்தாய நம:

ஸுக2ப்ராப்தி விஸ்தாரமாள்பகாந்தநமோ நினகெ3

ஸுக2 உன்னாஹ விஸ்தார கர்த்ரு உதா3ரகருணி

ஸுக2மயனெ சின்மயனெ நின்னய ஸுமனோஹர

அகளங்கரூப நின்னிச்செயிம் 4க்தர்கெ3தோருவி 

பக்தர்களுக்கு சுகப்ராப்தியை அபாரமாக அளிப்பவனே. காந்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். சுகத்தை அதிகமாக ஏராளமாக கொடுக்கும் கருணைக்கடலே. சுகமயனே. சின்மயனே. உன் மனோஹர களங்கமற்ற ரூபத்தினை, உன் இஷ்டப்படியே உன் பக்தர்களுக்கு காட்டுவாய். 

***


Sunday, July 30, 2023

#225 - 663-664-665 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

663. ஸ்ரீ கேஶிக்4னே நம:

ஶிரகண்ட2 சே2தி3ஸுவ வஜ்ரஸ்த2கேஶிஹாநமஸ்தே

ஸுரத்3விட் கேஶி நாம அஸுரன்ன ஸீளி பி3ஸுடி

க்ரூர கேஶி ஹாஹாகாரதி3 கோபதி3ம் 3ரலு

வஜ்ரகர கண்ட2தொ3ளு நுக்3கி3ஸி ஸீள்தி3 ஸ்ரீகிருஷ்ண 

(எதிரிகளின்) தலை, கழுத்து ஆகியவற்றை அழிக்கும் கேஶிக்னே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸஜ்ஜனர்களின் நண்பனே. கேஶி நாமக அசுரனை நீ அழித்தாய். க்ரூரனான கேஶி, ஹாஹாகாரம் செய்தவாறு, கோபத்துடன் வர, உன்னுடைய வஜ்ர கரமானது, அவனது கழுத்தில் அழுத்தி அவனை கொன்றாய், ஹே கிருஷ்ணனே. 

664. ஸ்ரீ ஹரயே நம:

ஶத்ரு பரிஹார மாடு3ஹரிநமோ நினகெ3

ஶத்ரு ஈர்வித4வு பா3ஹ்யாந்தரக3 நீ களெவி

ஶத்ருக3 பாபக3 கஷ்டக3ள் பரிஹரிஸி

ஸர்வப்ரகாரத3லு ஸுக2வித்து ரக்ஷிஸுவியோ 

எதிரிகளை அழிக்கும் ஸ்ரீஹரியே உனக்கு என் நமஸ்காரங்கள். அகத்தில் & புறத்தில் இருக்கும் இரு விதமான எதிரிகளை நீ அழிப்பாய். எதிரிகளின், பாவிகளின் (அவர்கள் நமக்குக் கொடுக்கும்) கஷ்டங்களை பரிகரித்து, ஸஜ்ஜனர்களுக்கு அனைத்து விதங்களிலும் சுகம் அளித்து காப்பாயாக. 

665. ஸ்ரீ காமதே3வாய நம:

காமித க்3ருஹாதி33 ப்ராப்தி மாடு3வவனு

காமதே3வனேநமோ நினகெ3 காமத3 உதா3

காம ஆனந்த3 ஞான ஸ்ருஷ்ட்யாதி3 கர்த்ரு ஸுக2கா

காம ஸ்மராந்தர்யாமி காமதே3 ஸனத்குமார 

விரும்பிய இஷ்டார்த்தங்களை அளிக்கும் காமதேவனே உனக்கு என் நமஸ்காரங்கள். விரும்பியவற்றை அளிப்பவனே. கருணைசாலியே. காம, ஆனந்த, ஞானத்தை கொண்டவனே. ஸ்ருஷ்ட்யாதி கர்த்ருத்வங்களை செய்பவனே. ஸுகத்தைக் கொண்டவனே. காமனின் அந்தர்யாமியாக இருப்பவனே. காமதேவனே. ஸனத்குமாரனே. 

***


Saturday, July 29, 2023

#224 - 660-661-662 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

660. ஸ்ரீ த்ரிலோகாத்மனே நம:

விஸ்த்ருத ஞானதா3தனுத்ரிலோகாத்மாநமோ எம்பெ3

விஸ்தாரவாகி3 நின்ன மஹிமெ ஸர்வத்ர ப்ரக்2யாத

அதி4காரி ஸர்வர்கு3 இதரர்கு3 வேத3 புராண

இத்தி யோக்ய ஸாத4னக்கெ வேத3வயாஸ த்ரிலோகஸ்வாமி

பரந்த ஞானம் கொண்டவனே. த்ரிலோகாத்மனே உனக்கு என் நமஸ்காரங்கள். உன் அபாரமான மகிமைகள் அனைத்து இடங்களிலும் பரவியிருக்கிறது. அனைவருக்கும் நீயே அதிகாரி. வேத புராணங்களை ஸாதனைக்காக கொடுத்தாய். வேதவ்யாஸனே. த்ரிலோக ஸ்வாமியே. 

661. ஸ்ரீ த்ரிலோகேஶாய நம:

பாபிஶத்ரு கர்மப்4ரஷ்ட ஸர்வர நிந்தி3ஸுவனு

பாபாதி3ஹரத்ரிலோகேநமோ எம்பெ3 நினகெ3

ஸ்ரீப நீ ஸர்வஶத்ரு ஸமுதா3 கர்மப்4ரஷ்டரு

பாபிக3ளு எல்லர ஶாஸக ஸ்வாமியாகி3ருவி 

பாவிகள், எதிரிகள், கர்மங்களை விட்டவர்கள் ஆகியோரை எதிர்ப்பவன். பாவங்களை அழிப்பவன். த்ரிலோகேஶனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. பாவிகள், எதிரிகள், கர்மங்களை விட்டவர்கள் ஆகியோரின் தலைவனே. அனைவரின் ஸ்வாமியே. 

662. ஸ்ரீ கேஶவாய நம:

ஸுக2ஸம்பத் ஶ்ரேயஸ் ஈவகேஶவநமோ நினகெ3

கேஎந்த3ரெ ப்ரகா பூர்ணஞான ஜ்யோதிர்மயனு

எந்த3ரெ ஆனந்தாதி3 ஸம்பன்னனு ஸதா3னந்தா3

எந்த3ரெ வரணீய நித்ய ஸுக2தா3 நீனு 

சுக செல்வங்கள், புகழ் ஆகியற்றை கொடுக்கும் கேவனே உனக்கு என் நமஸ்காரங்கள். கே என்றால் - ஒளிமயமான, பூர்ண ஞானத்தைக் கொண்டவன். ஜ்யோதிர்மயன் என்று அர்த்தம். என்றால் - ஆனந்தாதி ஸம்பன்னன். ஸதானந்தன் என்று அர்த்தம். வ என்றால் - நித்ய சுகமான முக்தியை கொடுப்பவன் நீயே என்று அர்த்தம். 

***


Friday, July 28, 2023

#223 - 657-658-659 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

657. ஸ்ரீ வீராய நம:

அதிஶக்திமந்தனுவீரநமோ நமோ நினகெ3

அதிபரிமித ஶக்தியிம் ஸர்வசராசர

பூ4தஸர்வ நின்ன அதீ4னத3ல்லிட்டுகொண்டு3 நீனு

உத்34வஸ்தி2த்யாதி33 மாடு3வி ஸர்வே வீர 

அபாரமான சக்தியை கொண்டவனே. வீரனே உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னுடைய அபாரமான சக்தியினால், அனைத்து சராசரங்களும் உன்னுடைய அதீனமாக இருக்கின்றன. நீயே ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயங்களை செய்பவன். ஸர்வேஸ்வரனே. வீரனே. 

658. ஸ்ரீ ஶுராய நம:

அப4யனு அப4யத3னுஶுரநமோ நினகெ3

அப4ஶுர நீ பூதனி ஶகட த்ருணாவர்த்த

இப4 குவலயா பீடா3 மல்லர கம்ஸ சைர்யாதி3

டா3ம்பி3கரு முர குஜஹந்தா ஸுஜனரக்ஷக 

அபயம் அளிப்பவனே. ஶுரனே உனக்கு என் நமஸ்காரங்கள். பூதனி, கட, த்ருணாவர்த்த, இப, குவலயாபீட, மல்லர்கள், கம்ஸன், முர, ஆகிய அசுரர்களை கொன்றவனே. ஸஜ்ஜனர்களின் ரக்‌ஷகனே. 

659. ஸ்ரீ ஸூரிஜனேஶ்வராய நம:

ஞானியாத3ரு ஸாமான்ய மூர்கராத3ரு 4க்தர்கெ3

நீனு ஸுக2வகொட்டு பாலிபஸூரிஜனேஶ்வரா

நமோ எம்பெ3 குப்3ஜமாலாகார வித்3வன்

மணிபாண்ட3 த்3ரௌபதி3 ஸுதா4மாதி3கெ3 ஸுக23

ஞானியானாலும், ஸாமான்ய மக்களானாலும், உன் பக்தர்கள் என்றால், நீ அவர்களுக்கு சுகத்தை கொடுத்து காக்கிறாய். ஸூரிஜனேஸ்வரனே உனக்கு என் நமஸ்காரங்கள். குப்ஜை, பாண்டவர்கள், திரௌபதி, ஸுதாமா ஆகியோருக்கு சுகத்தை அருளியவனே. 

***