ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
627. ஸ்ரீ லோகத்ரயாஸ்ரயாய நம:
அத்3பு4த ஸுசர்யனு ப்ரீதிகா3ஸ்ரயனாகி3ருவி
மாத4வனே ‘லோக த்ரயாஸ்ரயனே’ நமோ நினகெ3
த்ராதா ஆஶ்ரய நீனு மூரு லோகங்க3ளிகெ3 ஸ்வாமி
முக்தராஶ்ரய வைகுண்ட2 வாஸுதே3வ நாராயண
அற்புத சரித்திரங்களை கொண்டவனே. அன்பே உருவமாக கொண்டவனே. மாதவனே. லோக த்ரயாஸ்ரயனே உனக்கு என் நமஸ்காரங்கள். மூன்று உலகங்களுக்கு நீயே ஆஸ்ரயன். முக்தர்களுக்கும் நீயே கதி. வைகுண்டனே. வாஸுதேவனே. நாராயணனே.
628. ஸ்ரீ ஸ்வக்ஷாய நம:
ஸாது4 யக்ஞமாடு3வ க்3ருஹக்கெ ப3ந்து3 நில்லுவியோ
மாத4வனெ ‘ஸ்வக்ஷ’ நமோ ஸர்வோத்தமனே ஸ்வதந்த்ர
ஸ்வாதந்த்ர்யஸத்த ஸுக2ஞான ஸ்வரூப இந்த்3ரியாவான்
ஸௌந்த3ர்யஸாரவு ஸர்வ இந்த்3ரிய கரணக3ளு
பிராமணர்கள் யக்ஞம் செய்யும் வீடுகளில் வந்து நிற்பவனே. மாதவனே. ஸ்வக்ஷனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஸர்வோத்தமனே. ஸ்வதந்த்ரனே. ஸுக ஞான ஸ்வரூபனே. இந்திரியங்களை ஆள்பவனே. உன்னுடைய அனைத்து இந்திரியங்களும் (ரூபமே) மிகவும் அழகானது.
629. ஸ்ரீ ஸ்வங்கா3ய நம:
தே3வதெக3ளிகெ3 ஸௌந்த3ர்யாதி3 ஒள்ளே ஸத்தாப்ரத3
ஸ்ரீவரனே ‘ஸ்வங்க3’ நமோ ஷுப4தம அங்க3க3ளு
தே3வதெக3ள ஆஶ்ரயனு ஸத்தாப்ரவ்ருத்தி ஞானதி3
தா3தா ஸ்வதந்த்ர ஸத்தாதி3 பூர்ண ஆனந்த3மயனு
தேவதைகளுக்கு அழகு முதலான அனைத்து குணங்களையும் அளிப்பவனே. ஸ்ரீவரனே. ஸ்வங்கனே உனக்கு என் நமஸ்காரங்கள். மங்களங்களை அருளும் அங்கங்களை கொடுப்பவனே. தேவதைகளின் கதியே. ஞானம் முதலான அனைத்தையும் வழங்குபவனே. ஸ்வதந்த்ரனே. ஆனந்தமயனே.
***
No comments:
Post a Comment