Thursday, July 6, 2023

#203 - 597-598-599 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

 597. ஸ்ரீ ஶாந்தயே நம:

கல்யாண ரூப நீனுஶாந்திநமோ நமோ நினகெ3

நித்யஸுக2 உன்னதனு ரமாரமண ஸ்ரீவத்ஸ

தோயஜாஸன ஶிவாதி3 4க்தரிகெ3 ஸுக2தா3

நித்ய நிர்தோஷ கல்யாண ஸுகா2த்3யனுப4பூ4ர்ம 

நித்ய கல்யாண ரூபனே. ஷாந்தயே உனக்கு என் நமஸ்காரங்கள். நித்ய ஸுகபூர்ணனே. ஸர்வோத்தமனே. ரமாரமணனே. ஸ்ரீவத்ஸனே. பிரம்ம, சிவ முதலான பக்தர்களுக்கு சுகத்தை கொடுப்பவனே. நித்ய நிர்தோஷனே. கல்யாண சுகாதி அனுபவத்தைக் கொண்டவனே. 

598. ஸ்ரீ பராயணாய நம:

உத்தம பத3வீவிபராயணநமோ நினகெ3

4க்தரிகெ3 ஸம்யக் வேதா3ந்த விக்ஞான நிஸ்சிதார்த்த2

நீ திளிஸி யோக்3யோபாஸன மாடி3ஸி அபரோக்

வித்து மோக்ஷபத3வீவி நீனு முக்தரிகு3 ஆஸ்ரய 

முக்தியை அளிப்பவனே. பராயணனே உனக்கு என் நமஸ்காரங்கள். உன் பக்தர்களுக்கு வேதாந்த யதார்த்த ஞானத்தை அளித்து, அவரவர் யோக்யதைக்கேற்ப உபாஸனை செய்வித்து, அபரோக்‌ஷ ஞானத்தை அளித்து, மோட்சத்தை அளிக்கிறாய். நீ முக்தர்களுக்கும் ஆஸ்ரயனாக இருக்கிறாய். 

599. ஸ்ரீ ஶுபா4ங்கா3 நம:

ஶுப4தமபு4த்3தி4 நின்னது3ஶுபா4ங்க3நமோ எம்பெ3

ஶோப4 அங்க33ளு ஞானானந்தா3தி3 3லக3ளிம்

ஸுபூர்ணவு ஶுர 3க்ஷிணோத்தர பக்ஷக3ள் மத்4

த்3விபாத3 அங்கா3க்3யபி4ன்ன ஆனந்த3மய சார்வாங்க3

 

மங்களங்களை அருளும் புத்தி உன்னுடையது. ஷுபாங்கனே உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னுடைய மங்கள அங்கங்கள், ஞானானந்தாதி பலங்களால் முழுமையானவை. வேதவ்யாஸனே. ஆனந்தமயனே. சுந்தராங்கனே.

***

No comments:

Post a Comment