Thursday, July 20, 2023

#216 - 636-637-638 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

636. ஸ்ரீ சின்னஸம்ஶயாய நம:

ஹதஶத்ருசின்னஸம்ஶயநமோ ஸர்வக்3ஞதீ4

4க்தரிகெ3 யதா2ர்த்த2ஞான தடெ3மாள்ப ஸம்ஶய

ஶத்ருவாகி3ஹுது3 அபரோக் லபி4புத3கெ

ஶத்ரு ஸம்ஹரிஸி 4க்தரிகெ3 அபரோக் வீவி 

துஷ்டர்களின் எதிரியே. சின்னஸம்ஷயனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸர்வக்ஞனே. உன்னுடைய பக்தர்களுக்கு யதார்த்த ஞானத்திற்கான தடைகளை (சந்தேகங்களை) எதிரியாக நின்று அழிக்கிறாய். அத்தகைய தடைகளை அழித்து, பக்தர்களுக்கு அபரோக்‌ஷத்தை அளிக்கிறாய். 

637. ஸ்ரீ உதீ3ர்ணாய நம:

சென்னாகி3 ஶத்ருக3ளன்ன கொல்லுவிஉதீ3ர்ணநமோ

4 அந்த:ஶத்ரு ஆரன்னு ஜயிஸுவ 3லகொட்டு

க்ஷோணிது3ஷ்டரு 3ஹிஶத்ரு நாஶமாடி3 நீ ஸுக2

ஞான வீவி ருத்3ராந்தர்க3 வாயுஸ்த2 நரஸிம்ஹ

எதிரிகளை கொல்பவனே. உதீர்ணனே உனக்கு என் நமஸ்காரங்கள். எனக்குள் இருப்பதான அரிஷட் வர்க்கங்களை வெல்லும் வலிமையை கொடுப்பாயாக. அதைப் போல, வெளியில் இருக்கும் துஷ்டர்களையும் நீ அழித்து, எனக்கு சுகத்தையும், ஞானத்தையும் அருள்வாயாக. ருத்ராந்தர்கத, பாரதிரமண முக்யப்ராணாந்தர்கத நரசிம்மனே. 

638. ஸ்ரீ ஸர்வதஸ் சக்ஷுஷே நம:

ஸர்வஶத்ரு ப்ரயோகி3ஸித3 ஆயுத4 நிவாரண

ஹே ஸ்வாமி நீமாள்பிஸர்வத:சக்ஷுநமோ நினகெ3

ஸர்வதா3 ஸர்வாபரோக்ஷி பூர்ணஞான ஶக்த்யாத்மனு

ஸர்வஸத்ப4க்தர விக்4னபா3தெ4 ஹர ஞானதா3தா 

அனைத்து வித எதிரிகளும் பிரயோகித்த ஆயுதங்களை நீ பரிகரிப்பாய். ஹே ஸ்வாமியே. ஸர்வத: சக்ஷுஷே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து இடங்களிலும் வ்யாபித்திருப்பவனே. பூர்ண ஞானத்தைக் கொண்டவனே. ஷக்த்யாத்மனே. அனைத்து ஸத் பக்தர்களின் தடைகளை, பிரச்னைகளை போக்குபவனே. ஞானத்தை அருள்பவனே. 

***


No comments:

Post a Comment