Tuesday, July 11, 2023

#208 - 612-613-614 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

612. ஸ்ரீ க்ஷேமக்ருதே நம:

உபதே3 ரூபவாத3 மங்க3ளவீவக்ஷேமக்ருத்

ஸ்ரீபதே நமோ எம்பெ3 வரவாயு அந்தர்யாமி

த்வத்ப4க்தஞானிகு3ரு ஒளகி3த்3து3 உபதே3

லபி4ஸிஸி அதி4காரிகெ3 ஶோப4 க்ஷேம வீவி 

உபதேச ரூபமான மங்களங்களை அருள்பவனே. க்‌ஷேமக்ருதே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீபதியே. வாயு அந்தர்யாமியே. உன் பக்த ஞானிகளின் உள்ளே இருந்து, உபதேசங்களை அருளி, அவர்களின் யோக்யதைக்கேற்ப நலன்களை அருள்பவனே. 

613. ஸ்ரீ ஶிவாய நம:

ஞானவான்ஶிவநமோ அபரோக் ஶோப4னதா3

ஆனந்த3 ஞானாதி3 ஸுமங்க3 கு3ணைஶ்வர்யதி3ம்ஶி

அனுபம ஶ்ரேஷ்டத்வ வரணேயத்வதி3ம்எந்து3

நீனு ஶிவ ஞானானந்தை3ஶ்வர்யக்காகி3 வரணீய 

ஞானவந்தனே. சிவனே. அபரோக்‌ஷ சாதனத்தை வழங்குபவனே. ஆனந்த, ஞானாதி, மங்கள குணங்கள் உள்ளதால் ‘சி; சிறந்ததான வரங்களை அளிப்பதால் ‘வ என்று நீ ‘சிவ என்று அழைக்கப்படுகிறாய். ஞானானந்த ஐஸ்வர்யத்திற்காக வணங்கப்படுபவனே. 

614. ஸ்ரீ வத்ஸவக்ஷஸே நம:

ஸூர்யனன்ன கம்பிஸுவஸ்ரீவத்ஸவக்ஷஸேநமோ

ஸ்ரீயாயுக்த வத்ஸ மஹத்வ லக்ஷண வக்ஷத3ல்லி

ஸ்ரீய:பதியே நினகு3ண்டு லக்ஷ்மீகா3ஸ்ரய நீனு

காயவாங்மன கலுஷகீ1ளி ஸௌபா4க்3 கொடு3வி 

சூரியனை விட அதிக ஒளி கொண்டவனே. ஸ்ரீவத்ஸவக்‌ஷஸே உனக்கு என் நமஸ்காரங்கள். லட்சுமிதேவியை மார்பில் தரித்தவனே. ஸ்ரீபதியே. லட்சுமியின் தலைவன் நீயே. வாக்கு, தேகம், மனதினால் வரும் கஷ்டங்களை நீக்கி, ஸௌபாக்கியங்களை அருள்பவனே. 

***


No comments:

Post a Comment