Tuesday, July 4, 2023

#201 - 591-592-593 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

591. நிர்வாணாய நம:

ஸுக2ரூபநிர்வாணம்நமோ நமோ எம்பெ3 நினகெ3

ப்ராக்ருத விலக்ஷண அப்ராக்ருத ஸுக2சித்தனு

அகளங்கவு தோ3ஷலேபவில்ல 3ந்த2வுக3ளு

ஸ்ரீகாந்த நின்னய மூல அவதார ரூபக3ளு 

சுகமய ரூபனே. நிர்வாணாய நமோ. உனக்கு என் நமஸ்காரங்கள். ப்ராக்ருதமான வஸ்துகளிலிருந்து வேறுபட்டவன். அப்ராக்ருத சுக சித்தத்தைக் கொண்டவனே. ஸ்ரீகாந்தனே, உன்னுடைய மூல மற்றும் அவதார ரூபங்களில், சிறிதளவு கூட உன்னிடம் தோஷம் இல்லை. 

592. ஸ்ரீ பே4ஷஜாய நம:

ஸம்ஸார ரோக3 பரிஹாரகனுபே4ஷஜன்நமோ

பே4 எந்த3ரெ ரோக3, ரோக3வன்னு ஜயிஸுவவனு

ஔஷத4 நியாமகனாகி3ருதியோ நீனு

நீ ஸர்வகாமஜ தோ3 ஶோகாதி3 து3க்க2 களிவி 

சம்சார ரோகத்தை போக்குபவனே. பேஷஜனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ‘பேஷ என்றால் எத்தகைய நோயினையும் போக்குபவன். ஔஷதங்களின் நியாமகனாக இருப்பவன் நீயே. பக்தர்களின் விருப்பங்களை போக்குபவனே. தோஷ, சோகங்கள் போன்ற துக்கங்களை நீ களைகிறாய். 

593. ஸ்ரீ பி4ஷஜே நம:

பி4ஷக் நீ யக்ஞ ஸமீபஸ்த2னாகி3ருவி நமஸ்தே

பி4ஷக்நீ ஸம்ஸாரரோக3 வைத்3 ஸ்ரீத4ன்வந்தரி

பி4ஷக் நீ ஸர்வரோக3 நிதா4 சிகித்ஸெய மாள்பி

தோ3ஷதூ3 தேஜஸ்வி மஹைஶ்வர்யாதி3 கு3ணரூப 

யக்ஞங்களுக்கு அருகில் நீ இருப்பதால் ‘பிஷக் என்று அழைக்கப்படுகிறாய். சம்சார ரோகத்தை போக்குபவனான ஸ்ரீதன்வந்தரியாக இருக்கிறாய். அனைத்து நோய்களின் சிகிச்சையையும் நீ செய்கிறாய். தோஷங்கள் அற்றவனே. தேஜஸ்வியே. மஹா ஐஸ்வர்ய முதலான அனைத்து குணங்களையும் கொண்டவனே. 

***


No comments:

Post a Comment