Sunday, July 9, 2023

#206 - 606-607-608 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

606. ஸ்ரீ கோ3ப்த்ரே நம:

ப்ருஷத்4னாதி3 ராஜ ரக்ஷககோ3ப்தாநமோ நினகெ3

ரக்ஷிஸுதி ஸர்வரன்னு நின்ன ஸம ஸ்வாமி இல்ல

குக்ஷியொளிட்டு ஸர்வத3 ரக்ஷிஸிதி3 ப்ரளயத3லி

பரீக்ஷித் ரக்ஷக நீனு க்ஷிதிபா4 இளிஸிதி3 

பாண்டு புத்திரங்கள் முதற்கொண்டு அனைத்து அரசர்களையும் காப்பவனே. கோப்த்ரனே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைவரையும் காப்பவனே. உனக்கு சமம் என்று யாரும் இல்லை. பிரளய காலத்தில் அனைவரையும் உன் வயிற்றில் வைத்து காத்தாய். பரீக்‌ஷித் ராஜனை காத்தவனே. பூமியின் பாரத்தை இறக்கியவனே. 

607. ஸ்ரீ வ்ருஷபா4க்ஷாய நம:

4ர்ம ஸூக்ஷ்மஞானி ஸர்வவ்யாபகவ்ருஷபா4க்

நமோ 4ர்மசாரிகெ3 அனுக்3ரஹ த்3ருஷ்டி பீ3ருவி

ஸமரஹித பரமோத்தம ஸ்வாமி அவினாஶி

அமிதஞான ப்ரகாஷ நிர்தோ3 வ்ருஷபா4க்ஷனு 

தர்மனே. அபாரமான ஞானியே. அனைத்து இடங்களிலும் வ்யாபகனே. வ்ருஷபாக்‌ஷனே உனக்கு என் நமஸ்காரங்கள். தர்மங்களை பின்பற்றுபவர்களின் மேல் உன் அருட்பார்வையை வீசுவாய். சமம் இல்லாதவனே. ஸர்வோத்தம ஸ்வாமியே. அழிவில்லாதவனே. அபாரமான ஞானத்தை கொண்டவனே. ஒளிமயமானவனே. நிர்தோஷனே. வ்ருஷபாக்‌ஷனே. 

608. ஸ்ரீ வ்ருஷப்ரியாய நம:

ஈப்ஸிதவ ஸுரிஸுவி ஸ்தோத்ர ப்ரியனாகி3ருவி

வ்ருஷப்ரியனேநமோ ஸாமாதி3 வேத3 ஸ்தோத்ரப்ரிய

வ்ருஷ எந்த3ரெ 4ர்ம 4ர்மப்ரிய நீ 4ர்மமய

த்ரயீமயோ 4ர்மமயோ தபோமய:’ பா43வத 

வேண்டிய வரங்களை அருள்பவனே. ஸ்தோத்திர ப்ரியனே. வ்ருஷப்ரியனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸாம வேதாதி அனைத்து வேதங்களாலும் போற்றப்படுபவனே. வ்ருஷ என்றால் தர்மம். தர்மப்ரியனே, நீ தர்மமயனாக இருக்கிறாய். பாகவதத்தில் இவ்வாறே சொல்லப்பட்டிருக்கிறது. 

***


No comments:

Post a Comment